காதுகளுக்கு இயர் டிராப்ஸ் பயன்படுத்துவது சரியா…???
Author: Hemalatha Ramkumar13 November 2024, 6:53 pm
அடிக்கடி இயர் டிராப்ஸ் பயன்படுத்தும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? அதிலும் குறிப்பாக குளிர்காலத்தில் இயர் டிராப்ஸ் பயன்படுத்துவது உங்களுடைய காதின் ஆரோக்கியத்தை மிக மோசமாக பாதிக்கலாம். குளிர் காலத்தில் காற்றில் உள்ள ஈரப்பதம் நம்முடைய காதுகளை எப்படி பாதிக்கிறது என்றும் இயர் டிராப்ஸ் பயன்படுத்துவது அதனை எப்படி மோசமாக்கலாம் என்பது பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
குளிர்காலத்தில் அதிக ஈரப்பதம் காரணமாக பாக்டீரியா மற்றும் பூஞ்சை வளர்ச்சி அதிகப்படியாக இருக்கும். இது காது தொற்றுகள் ஏற்படுவதற்கான சாத்தியங்களை அதிகரிக்கிறது. இது போன்ற தொற்றுகள் காதுகளில் அரிப்பு, சிவத்தல், வீக்கம் மற்றும் சீழ் அல்லது தண்ணீர் வடிதல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய மற்றொரு பாக்டீரியா அல்லது பூஞ்சை தொற்று காரணமாக காதில் தாங்க முடியாத வலி, சிவத்தல், வீக்கம் மற்றும் பச்சை, மஞ்சள் நிறம் கலந்த சீழ் வெளியேற்றம் போன்றவை ஏற்படும். இது டின்னிட்டஸ் (Tinnitus) என்று அழைக்கப்படுகிறது. காற்றில் உள்ள ஈரப்பதம் காது மெழுகின் உற்பத்தியை பாதிக்கும். ஈரப்பதம் காது மெழுகை மென்மையாக்கி நாளடைவில் அது காதுகளை அடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. கூடுதலாக ஒரு சிலருக்கு காதில் ரிங்கிங் சத்தம் அல்லது தேனீக்களின் சத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது.
இயர் டிராப்ஸ் ஒரு தீர்வா அல்லது பாதகமா?
இயர் டிராப்ஸ் உங்களுடைய காதில் ஏற்படும் அசௌகரியத்திற்கு உடனடி தீர்வை தந்தாலும் சுய மருந்தை எடுத்துக் கொள்வது தவறு. மருத்துவரின் பிரிஸ்கிரிப்ஷன் இல்லாமல் இது போன்ற இயர் டிராப்ஸ்களை பயன்படுத்துவது பின்வரும் ஆபத்துகளை ஏற்படுத்தலாம்.
காது மெழுகு அடைப்பு
ஒரு சில இயர் டிராப்ஸ் அதிகப்படியான காது மெழுகு உற்பத்தியை தூண்டி பிரச்சனையை மோசமாக்கலாம்.
எரிச்சல் மற்றும் வீக்கம்
ஒரு சில இயர் டிராப்ஸில் உள்ள பொருட்கள் செவி குழாயில் எரிச்சலை ஏற்படுத்தி அதனால் வீக்கம் மற்றும் அசௌகரியத்தை உண்டாக்கும்.
இதையும் படிக்கலாமே: பிசியான அம்மாக்களுக்காவே இந்த சரும பராமரிப்பு டிப்ஸ்!!!
ஆன்டிபயாட்டிக் எதிர்ப்பு மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இயர் டிராப்ஸ் பயன்படுத்துவது ஆன்டிபயாட்டிக் எதிர்ப்பை ஏற்படுத்தலாம்.
செவித்திறன் இழப்பு
இயர் டிராப்ஸ்களை தவறாக பயன்படுத்தினால் அது செவி குழாயை பாதித்து அதனால் நிரந்தரமாக காது கேட்காமல் போவதற்கு வாய்ப்புள்ளது.
குளிர்காலத்தில் காதுகளை பராமரிப்பதற்கு உதவும் குறிப்புகள்:-
வழக்கமாக சுத்தம் செய்தல்
அடிக்கடி உங்களுடைய காதுகளை மென்மையான, ஈரமான ஒரு துணியை கொண்டு அதிகப்படியான காது மெழுகை அகற்றி விடுங்கள். இயர் பட்ஸ் பயன்படுத்துவது முற்றிலும் தவறு. ஏனெனில் அது காதில் உள்ள மெழுகை மேலும் உட்புறமாக நுழைத்து அதனால் தொற்றுகள் ஏற்படலாம்.
செவிப்புலன் கருவிகள்
ஒருவேளை நீங்கள் செவிப்புலன் கருவிகளை பயன்படுத்தி வந்தால் டிஹியுமிடிஃபயர்கள் அல்லது பாதுகாப்பான மூடிகளை பயன்படுத்தி அவற்றை ஈரப்பதம் காரணமாக ஏற்படும் சேதத்தில் இருந்து நீங்கள் பாதுகாக்க வேண்டும். உங்களுடைய செவிப்புலன் கருவிகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள்.
தண்ணீர் சம்பந்தமான செயல்பாடுகள்
நீச்சல் அடிப்பதை தவிர்ப்பது அல்லது பிற தண்ணீர் சம்பந்தமான செயல்பாடுகளை மழைக்காலத்தில் தவிர்த்து விடுவது உங்களுடைய காதுகளில் தொற்றுகள் ஏற்படுவதை தவிர்க்க உதவும்.
மருத்துவரை ஆலோசித்தல்
ஒருவேளை காதில் ஏதேனும் வலி, அசௌகரியம், தண்ணீர் அல்லது சீழ் வெளியேற்றம் விசித்திரமான சத்தம் போன்றவை இருந்தால் உடனடியாக ENT நிபுணரை அணுகி அதற்கான சரியான சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம்.