ஃபேஷியல் வைப்ஸ் பயன்படுத்துவது உண்மையில் நல்லதா…???

Author: Hemalatha Ramkumar
27 November 2024, 7:38 pm

பெண்களின் ஹேண்ட் பேக்கில் என்ன இருக்கிறதோ இல்லையோ இப்போது ஃபேஷியல் வைப்ஸை கட்டாயமாக வைத்திருக்கிறார்கள். இதற்கு பின்னணியில் பல காரணங்கள் உள்ளது. ஃபேஷியல் வைப்ஸ் என்பது சௌகரியமான ஒரு பொருளாக கருதப்படுகிறது. உதாரணமாக, முகத்தில் உள்ள அழுக்கை துடைப்பதற்கு, டீ, காபி சிந்தி விட்டால் அதனை துடைப்பதற்கு என்று பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் ஃபேஷியல் வைப்ஸ்களை தங்களுடைய ஹேண்ட்பேக்கில் வைத்திருக்கிறார்கள். மேலும் மேக்கப்பை அகற்றுவதற்கும் இந்த ஃபேஷியல் வைப்ஸ் பயன்படுத்தப்படுகிறது. 

தற்போது இந்தியாவில் உள்ள வெட் பைப்ஸ் மார்க்கெட் 744 கோடி ரூபாயாக உள்ளது. 2027-இல் இது 2155 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபேஷியல் வைப்ஸ் பல்வேறு பயன்பாடுகளை கொண்டிருந்தாலும் அதில் ஒரு சில பிரச்சனைகளும் இருக்கத்தான் செய்கிறது. ஃபேஷியல் வைப்ஸில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் சருமத்தை சுத்தம் செய்வதற்காக வடிவமைக்கப்பட்டவை. பெரும்பாலான ஃபேஷியல் வைப்ஸ் தோல் மருத்துவ பரிசோதனைக்கு  உட்பட்டது. ஆனால் அதில் உள்ள ஒரு சில கெமிக்கல்கள் அனைத்து சரும வகைக்கும் ஏற்றதாக இருக்காது. அதிலும் குறிப்பாக சென்சிட்டி சருமம் அல்லது அடிக்கடி முகப்பரு ஏற்படக்கூடிய சருமத்திற்கு இந்த கெமிக்கல்கள் நிச்சயமாக பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். 

மார்க்கெட்டில் நமக்கு பல்வேறு விதமான ஃபேஷியல் வைப்ஸ் கிடைக்கிறது என்பதால் அவற்றில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களை ஆராய்ந்து நல்ல தரமான ப்ராடக்டுகளை வாங்கி உங்களுடைய சரும பராமரிப்பு வழக்கத்தில் சேர்ப்பது அவசியம். மேலும் நீங்கள் வாங்கும் ப்ராடக்ட் உங்களுடைய சருமத்திற்கு ஏற்றதா என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும். ஏனெனில் ஒரு சில ப்ராடக்டுகளில் உள்ள கடினமான கெமிக்கல்கள் அல்லது அலர்ஜியை ஏற்படுத்தும் பொருட்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கிறது. 

மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன? 

ஃபேஷியல் வைப்ஸ் வாங்கும் பொழுது நீங்கள் ஒரு சில காரணிகள் மற்றும் அவற்றை சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். ஃபேஷியல் வைப்ஸின் தரம் மற்றும் உங்கள் சருமத்திற்கு அதை ஏற்றதா என்பதை  பார்க்க வேண்டும். 

இதையும் படிக்கலாமே: ஃபேஷியல் ஹேர் பிரச்சனைக்கு தீர்வு தருவதாக வைரலாகும் புதிய ஹேக்…!!!

நீங்கள் வாங்கும் ஃபேஷியல் வைப்ஸில் கற்றாழை, ஹயாலூரோனிக் அமிலம் அல்லது வைட்டமின் C போன்ற பொருட்கள் இருக்க வேண்டும். மேலும் அவற்றில் ஆல்கஹால் இருக்கக் கூடாது. மேலும் குறைவான பர்ஃப்யும் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அதிகப்படியான வாசனை சருமத்திற்கு எரிச்சல் ஏற்படுத்தி அதில் பிளாக் ஹெட் அல்லது வொயிட் ஹெட்டை ஏற்படுத்தலாம். 

பல பெண்கள் தங்களுடைய சரும பராமரிப்பு பழக்கத்தில் கிளென்சிங் செயல்முறையை தவிர்த்துவிட்டு இந்த ஃபேஷியல் வைப்ஸ் மூலமாக தங்களுடைய முகத்தை துடைத்துக் கொள்கின்றனர். இது சௌகரியமானதாக இருந்தாலும் இது உங்களுடைய வழக்கமான பராமரிப்பு வழக்கத்திற்கு மாற்றாக இருக்கக் கூடாது. 

மேக்கப் என்று வரும் பொழுது நீங்கள் அத்தியாவசிய எண்ணெய், கிரீம் அல்லது கிளென்சரை பயன்படுத்தலாம். எனவே மேக்கப்பை அகற்றுவதற்கு ஃபேஷியல் வைப்ஸை விட கிளென்சரே சிறந்தது. மேக்கப்பை அகற்ற ஃபேஷியல் வைப்ஸ் பயன்படுத்துவது நிச்சயமாக பரிந்துரைக்கப்படவில்லை. உங்களுடைய முகம் அதிக அழுக்காக இருக்கும் போதோ மற்றும் உங்களுக்கு தண்ணீர் கிடைக்காத சமயத்தில் நீங்கள் ஃபேஷியல் வைப்ஸ் பயன்படுத்தலாம். எனினும் ஒருவேளை உங்களுக்கு தண்ணீர் கிடைத்தால் முகத்தை தண்ணீர் கொண்டு கழுவி விட்டு, சாஃப்ட் டிஷ்யூ கொண்டு முகத்தை உலர்த்துவது நல்ல ஆப்ஷன் ஆக இருக்கும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 118

    0

    0