கர்ப்பமாக இருக்கும் போது அன்னாசிப்பழம் சாப்பிடக்கூடாது என்று ஏன் சொல்றாங்க தெரியுமா…???
Author: Hemalatha Ramkumar23 March 2023, 4:37 pm
ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது, இதை செய்ய வேண்டும், இதை செய்யக்கூடாது என்று பல விதமான அட்வைஸ்கள் கொடுக்கப்படும். அவற்றில் சில உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஒரு சில கட்டுக்கதைகளாகவே உள்ளன. அந்த வகையில் கர்ப்ப காலத்தில் அன்னாசிப்பழம் சாப்பிடக்கூடாது என்று சொல்லப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை இந்த பதிவின் மூலம் பார்ப்போம்.
அன்னாசிப்பழம் மிகவும் சத்தானது மற்றும் அவற்றில் ஏராளமான வைட்டமின் சி உள்ளது. பெண்கள் வைட்டமின் சி நிறைந்த பழங்களை எடுத்துக்கொள்வது அவசியம். ஏனெனில் இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வளர்க்க உதவுகிறது. ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது நோய்களிலிருந்து விலகி இருப்பது முக்கியம். அன்னாசிப்பழத்தில் உள்ள வைட்டமின் சி தமனிகள் அடைக்கப்படும்போது அவற்றை சுத்தம் செய்ய உதவுகிறது.
அன்னாசிப்பழத்தை அதிகமாக எடுத்துக் கொண்டால், அது முன்கூட்டிய பிரசவ வலியை உண்டாக்கும். அன்னாசிப்பழத்தில் கருப்பை வாயை மென்மையாக்க உதவும் ஒரு குறிப்பிட்ட வேதிப்பொருள் உள்ளது.
கர்ப்பிணிப் பெண்கள் அன்னாசிப்பழத்தை உட்கொள்வது கருப்பைக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறப்படுகிறது. அன்னாசிப்பழத்தில் கருப்பைக்கு தீங்கு விளைவிக்கும் அமிலம் அதிகம் இல்லை.
இவை அனைத்தும் ஒருபுறம் இருந்தாலும், உங்களுக்கு அன்னாசிப்பழம் சாப்பிட வேண்டும் போல இருந்தால், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்க வேண்டும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.