பாலை காய்ச்சாமல் குடித்தால் உடல்நலனுக்கு பிரச்சினை வருமா…???

Author: Hemalatha Ramkumar
6 November 2024, 11:27 am
Quick Share

பாலை பச்சையாக குடிப்பது நம்முடைய ஆரோக்கியத்திற்கு நல்லதா என்ற கருத்து பல நாட்களாக விவாதத்தில் இருந்து வருகிறது. பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் ஊட்டச்சத்துக்களின் தங்க சுரங்கம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. பாலில் கால்சியம், புரோட்டின், பொட்டாசியம், வைட்டமின் B12 போன்ற நம்முடைய உடலுக்கு தேவையான அத்தனை ஊட்டச்சத்துகளும் உள்ளது. குறிப்பாக பற்கள் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உதவுகிறது. தினசரி பால் குடிப்பது வயதானவர்களில் ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் வாய்வழி பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கும் என்று சொல்லப்படுகிறது. 

இது தவிர உடற்பருமன், உயர் ரத்த அழுத்தம் மற்றும் வகை 2 நீரிழிவு நோய் போன்ற நாள்பட்ட நோய்கள் பால் குடிப்பதன் மூலமாக தடுக்கப்படுகிறது. இவ்வளவு ஊட்டச்சத்துக்களை கொண்டிருந்தாலும் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் நம்முடைய ஆரோக்கியத்திற்கு ஒரு சில பிரச்சனைகளை ஏற்படுத்த தான் செய்கிறது. பாலை பச்சையாக குடிப்பது மற்றும் பாஸ்சுரைஸ் செய்யப்படாத பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட ப்ராடக்டுகளை சாப்பிடுவதால் நம்முடைய உடல் நலனுக்கு கேடு ஏற்படலாம். ஏனெனில் காய்ச்சாத பாலில் சால்மொனெல்லா, ஈ கோலை மற்றும் லிஸ்டீரியா போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன. 

நோய்களை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளின் மூலமாக அமையும் இது போன்ற பாலை குடிக்கும் பொழுது அது நம்முடைய ஆரோக்கியத்திற்கு சேதத்தை ஏற்படுத்தும். எனினும் காய்ச்சாத பால் முழுமையாக கெட்டது என்று நம்மால் சொல்லிவிட முடியாது. ஏனெனில் அதில் இயற்கை என்சைம்கள், நன்மை தரும் பாக்டீரியாக்கள், பயோ-ஆக்டிவ் காம்பௌண்டுகள் போன்றவை உள்ளன. இது நம்முடைய செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 

இதையும் படிக்கலாமே: பார்க்கும்போதே எச்சில் ஊறுதே… சுவையான அரிசி பாயாசம்!!!

அதே நேரத்தில் காய்ச்சாத பாலில் வளரும் லாக்டிக் அமில பாக்டீரியா நம்முடைய குடல் ஆரோக்கியம் மற்றும் செரிமானத்திற்கு ஆதரவு தருகிறது. தங்களுடைய உணவில் இயற்கையான ப்ரோபயாட்டிக்களை சேர்க்க விரும்பும் நபர்களுக்கு இது ஒரு சிறந்த உணவாக அமைகிறது. 

காய்ச்சாத பாலை குடிப்பதால் ஏற்படும் ஆபத்துகளை குறைப்பது எப்படி? 

பாலை பாஸ்சுரைஸ் செய்வது அல்லது ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு அதனை சூடு படுத்துவதன் மூலமாக பாலை பச்சையாக குடிப்பதால் ஏற்படும் ஒரு சில பிரச்சினைகளில் இருந்து  நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். ஏனெனில் இந்த செயல்முறை தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள், ஈஸ்ட் மற்றும் பிற நுண்ணுயிரிகளை கொன்று விடுகிறது. இதனால் பால் குடிப்பதற்கு பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. பாஸ்சுரைசேஷன் செயல்முறையானது பால் கெட்டுப் போவதற்கு காரணமாக அமையும்  என்சைம்கள் மற்றும்  பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை குறைக்கிறது. இதனால் பாலின் ஆயுட்காலம் அதிகரிக்கிறது. பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குபவர்கள் மற்றும் அதே நேரத்தில் உணவு மூலமாக பரவும் நோய்களிலிருந்து பாதுகாக்க நினைப்பவர்கள் பாஸ்சுரைஸ் செய்யப்பட்ட காலை பருகுவது நல்லது.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 61

    0

    0

    Leave a Reply