மாலை நேரத்தில் சிட்ரஸ் பழங்களை சாப்பிடக்கூடாதுன்னு சொல்றது உண்மையா இல்ல கட்டுக்கதையா???

Author: Hemalatha Ramkumar
2 November 2024, 11:27 am

பொதுவாக அன்றாட உணவில் பழங்களை சேர்த்துக் கொள்வது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. நம்மில் பலர் காலை, மதியம் மற்றும் மாலை என்று வெவ்வேறு நேரங்களில் பழங்கள் சாப்பிட விரும்புகிறோம். ஆனால் பொதுவாக அன்னாசிப்பழம், சாத்துக்குடி, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு சாப்பிடுவது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்ற பொதுவான கருத்து உள்ளது. இது உண்மையா அல்லது வெறும் கட்டு கதையா என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

சிட்ரஸ் பழங்களை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு சாப்பிடலாமா?

சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் C, நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிகம் காணப்படுகிறது. இது நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு ஒரு அற்புதமான உணவாக அமைகிறது. சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவது நல்ல யோசனையாக இருக்காது. ஏனெனில் இந்த பழங்களில் உள்ள அதிக அமில அளவு காரணமாக இது நமக்கு நெஞ்செரிச்சல், அஜீரணம் போன்ற செரிமான அசௌகரியங்களை ஏற்படுத்தலாம்.

இதனால் இரவு நேரத்தில் நம்முடைய உடலில் செரிமானம் மெதுவாகும். எனினும் இந்த கருத்தை உறுதிப்படுத்துவதற்கு போதுமான அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஒரு சிலர் இரவு நேரத்தில் சிட்ரஸ் பழங்களை சாப்பிட்ட பிறகு லேசான அசிடிட்டி அல்லது வயிற்று உப்புசத்தை அனுபவித்துள்ளனர். எனினும் இது நபருக்கு நபர் மாறுபடலாம். ஆகவே இதனை ஒரு பொதுவான கருத்தாக நம்மால் கூற இயலாது. 

இதையும் படிக்கலாமே: 

கிரிஸ்பி, ஹெல்தி சிறுதானிய தோசை ரெசிபி!!!

ஏற்கனவே நெஞ்செரிச்சல் அல்லது அஜீரணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருப்பவர்கள் இரவு நேரத்தில் சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சொல்லப்போனால் இந்த பழங்களை மாலை நேரத்திற்கு பிறகு சாப்பிடுவது நமக்கு இன்னும் பலனுடையதாக அமையும். உதாரணமாக சிட்ரஸ் பழங்களில் அதிக நீர்ச்சத்து இருப்பதன் காரணமாக இது உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை அளிக்கிறது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது. அதனால் காலையில் ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம். மேலும் வைட்டமின் C சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்றுகளிடமிருந்து நம்மை பாதுகாக்கிறது. 

எனினும் எந்த ஒரு உணவையும் மிதமான அளவு சாப்பிடும் பொழுது செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தொடர்ச்சியாக இரவு நேரத்தில் சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதால் உங்களுக்கு அஜீரணம் அல்லது நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் அதனை பகல் நேரத்தில் சாப்பிடுவது நல்லது. நம்முடைய உடலின் தேவைகளை பொறுத்து நம்முடைய பழக்க வழக்கங்களை நாம் தீர்மானிக்க வேண்டும். அந்த வகையில் உங்கள் உடல் இந்த பழங்களுக்கு என்ன மாதிரியான விளைவுகளை தருகிறதோ அதற்கேற்றவாறு முடிவு செய்வது நல்லது. 

  • Eiffel Tower Fire Incident நயன்தாரா-விக்னேஷ் சிவன் சென்ற “ஈபிள் டவரில்”பற்றி எறிந்த தீ…அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்!
  • Views: - 165

    0

    0