முளைத்த பூண்டு சாப்பிடுவதற்கு ஏற்றதா…???

Author: Hemalatha Ramkumar
2 December 2022, 3:34 pm

முளைத்த உருளைக்கிழங்கு நச்சுக்களைக் கொண்டிருப்பதால் அதனை சாப்பிடக்கூடாது என்பதை நாம் அறிவோம். அதே போல பூண்டும் முளைத்து விட்டால், அதனை சாப்பிடலாமா கூடாதா…?, அதிலும் நச்சுகள் இருக்குமா இருக்காதா? போன்ற கேள்வி பலர் மனதில் இருந்து வருகிறது. இந்த கேள்விக்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.

பூண்டு முளைத்துவிட்டாலும் கூட அதில் எந்த ஒரு நச்சுத்தன்மையும் உண்டாகாது. இருப்பினும், சாதாரண பூண்டை விட முளைத்த பூண்டின் சுவையானது வேறுபடும். முளைத்த பூண்டு சேர்த்து சமைக்கும் போது உணவில் கசப்பு தன்மை இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.

இந்த கசப்பு தன்மையை போக்க பூண்டின் முளைத்த பகுதியை அகற்றி விட்டு, பின்னர் சமைத்து சாப்பிடலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். லேசாக தானே முளைத்துள்ளது, இதனை சமைத்தால் ஒன்றும் ஆகாது என்று எண்ணி விடாதீர்கள்.

சிறிய அளவில் முளைத்த பூண்டினை உணவில் சேர்த்து சமைத்து சாப்பிடுவது கூட உணவில் மாற்றத்தை ஏற்படுத்தி விடும். கூடுதல் தகவல்களுக்கு பூண்டினை பச்சையாக சாப்பிட்டு வந்தால் இதயம் சார்ந்த பிரச்சினைகள், புற்றுநோய், பக்கவாதம் போன்றவற்றில் இருந்து உங்கள் உடலை பாதுகாத்துக் கொள்ளலாம்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 584

    0

    0