கற்றாழை ஜூஸ் குடிக்கிறதால ஏதும் பிராப்ளம் வந்துவிடாதே…???

Author: Hemalatha Ramkumar
18 January 2025, 12:37 pm

கற்றாழை சாறு என்பது நம்முடைய ஆரோக்கியத்திற்கு பல்வேறு விதமான நன்மைகளை அளித்தாலும் அதனை நாம் எச்சரிக்கையோடும், மருத்துவர்களின் வழிகாட்டுதலின் கீழும் பயன்படுத்துவது மிகவும் அவசியம். அதிலும் குறிப்பாக உங்களுக்கு ஏற்கனவே வேறு ஏதேனும் உடல்நல பிரச்சனைகள் இருந்தாலோ அல்லது நீங்கள் தொடர்ச்சியாக ஏதேனும் மருந்துகளை சாப்பிட்டு வந்தாலோ இந்த விஷயத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். கற்றாழை என்பது அதன் ஆரோக்கிய நலன்களுக்காக பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கற்றாழை சாற்றின் நன்மைகள் 

மலச்சிக்கல்

கற்றாழையில் மலமிளக்கும் விளைவுகள் இருப்பதால் இது குடலில் அசைவுகளை தூண்டி, மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் தருகிறது என்று ஒரு சில ஆய்வுகள் பரிந்துரை செய்கின்றன.

இரிட்டபிள் பவல் சிண்ட்ரோம் 

கற்றாழையில் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம் அறிகுறிகளை தணிப்பதற்கான பயன்கள் இருப்பதாக மிகக் குறைவான ஆய்வுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இரைப்பை குடல் சம்பந்தப்பட்ட நோய்கள்

நெஞ்செரிச்சல் மற்றும் அமில ரிஃப்ளக்ஸ் போன்ற இரைப்பை குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் கற்றாழை சாறு குடிப்பதால் குணமாகும் என்று சில ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரத்த சர்க்கரை கட்டுப்பாடு

கற்றாழையை வைத்து ஆரம்பத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இது ரத்த சர்க்கரை அளவுகளை குறைக்க உதவுவதாக கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் இதனை உறுதிப்படுத்துவதற்கு இன்னும் கூடுதல் ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வீக்க எதிர்ப்பு பண்புகள்

கற்றாழையில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் வீக்க எதிர்ப்பு காம்பவுண்டுகள் இருப்பதால் இது சருமத்தின் ஆரோக்கியத்திற்கு நன்மை தருகிறது.

கருத்துக்கோள்கள் மற்றும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் 

கற்றாழையில் உள்ள வலிமையான மலமிளக்கும் பண்புகள் பின்வரும் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்:-

*வயிற்றுப்போக்கு, அடி வயிற்றில் வலி, எலக்ட்ரோலைட் சமநிலையின்மை.

*சிறுநீரகம் பிரச்சனைகள்: கற்றாழையை தொடர்ந்து அல்லது அதிக அளவில் சாப்பிடும் பொழுது அது சிறுநீரகங்களை பாதிக்கலாம்.

*மருந்துகளுடன் வினைபுரிகிறது: கற்றாழை ஒரு சில மருந்துகளுடன் வினைபுரிந்து உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. 

*கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மற்றும் தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் கற்றாழை சாறு குடிப்பதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: நிறுத்தவே முடியாத தலைமுடி உதிர்வை சமாளிக்க கூட இயற்கை ஒரு வழி சொல்லுது!!!

முக்கியமான குறிப்புகள்

*கற்றாழை சாற்றை பருகுவதற்கு முன்பு அதற்கான பாதுகாப்பான மற்றும் சரியான அளவு என்ன என்பதை மருத்துவரை ஆலோசித்து தெரிந்து கொள்ள வேண்டும். 

*நீங்கள் பருகும் கற்றாழை சாறு தரமானதாக இருக்க வேண்டும்.

*கற்றாழை சாறு பருகும் பொழுது ஏதேனும் விளைவுகளை அனுபவிக்கும் பட்சத்தில் உடனடியாக அதனை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு மருத்துவரை அணுக வேண்டும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!