பிரக்னன்சி டைம்ல வெள்ளைப்படுதல் பிரச்சினை சகஜமான ஒரு விஷயமா??? 

Author: Hemalatha Ramkumar
3 October 2024, 5:03 pm

கர்ப்ப காலம் என்பது ஒரு பெண்ணுக்கு மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு குழப்பம் போன்ற பல்வேறு விதமான எமோஷன்களை வெளிக்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக ஒரு பெண் தன்னுடைய உடலில் நடைபெறும் மாற்றங்களை புரிந்து கொள்ள முயலும் பொழுது அவளுக்கு பல்வேறு விதமான கேள்விகள் எழலாம். அந்த வகையில் கர்ப்ப காலத்தின் ஆரம்ப கால அறிகுறியாக இருந்து கர்ப்ப காலம் முழுவதும் காணப்படும் வெள்ளைப்படுதல்  சம்பந்தமாக பெண்களுக்கு பல கேள்விகள் எழுவதுண்டு. ஆனால் பிரக்னன்சி சமயத்தில் ஏற்படும் வெள்ளைப்படுதல் வழக்கமான ஒன்றா அல்லது அது குறித்து வருத்தப்பட வேண்டுமா?இது குறித்த தகவல்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

கர்ப்ப காலத்தில் வெள்ளைப்படுதல் என்பது முற்றிலுமாக வழக்கமான ஒரு விஷயம்தான். மேலும் அது கர்ப்பத்தின் அடுத்தடுத்த மாதங்களில் இன்னும் தடிமனாக ஆரம்பிக்கும். பிறப்புறுப்பில் இருந்து வரும் அதிகப்படியான வெளியேற்றம் கர்ப்பத்தின் ஆரம்ப கால அறிகுறியாக கருதப்படுகிறது. இந்த வெளியேற்றமானது மெலிதாக, தெளிவாக அல்லது பால் வெள்ளை நிறத்தில் மற்றும் பொதுவாக எந்த ஒரு வாசனையும் இல்லாமல் இருக்கும். எனினும் உங்களுடைய பிறப்புறுப்பு வெளியேற்றத்தில் ஏதேனும் துர்நாற்றம் இருந்தாலோ அல்லது அதனுடன் சேர்ந்து அரிப்பு, எரிச்சல் அல்லது அசௌகரியம் இருந்தாலோ உடனடியாக மகப்பேறு நிபுணரை அணுகுங்கள். 

வெள்ளைப்படுதல் என்பது பல்வேறு காரணங்களுக்காக ஏற்படலாம். 

*கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் உள்ள அதிக ஈஸ்ட்ரோஜன் அளவுகளால் உண்டாக்கலாம். 

 *கர்ப்பத்தை பாதுகாப்பதற்கு அதிகப்படியான திரவத்தை உடலானது உற்பத்தி செய்கிறது. 

*பிறப்புறுப்பு சுவர்களில் ஏற்படும் அதிகப்படியான ரத்த ஓட்டத்தின் விளைவாக வெள்ளைப்படுதல் உருவாகலாம். 

கர்ப்ப காலத்தில் ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனையை ஒரு பெண் எப்போது தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்?

வெள்ளைப்படுதல் என்பது பச்சை, மஞ்சள் நிறத்தில் இருந்தாலோ அல்லது அளவுக்கு அதிகமாக தடிமனாகவோ அல்லது தண்ணீராகவோ இருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

எரிச்சல் அல்லது அரிப்பை உண்டாக்கும் வெள்ளைப்படுதல். 

பிறப்புறுப்பு பகுதியில் சிவத்தல் அல்லது வீக்கத்தை ஏற்படுத்தும் வெள்ளைப்படுதல். 

சிறுநீர் கழிக்கும் பொழுது வலி 

ரத்தத்துடன் கலந்த பிறப்பு உறுப்பு வெளியேற்றம். 

வெள்ளைப்படுதல் ஏற்படும் போது காய்ச்சல் அல்லது அடி வயிற்றில் வலி இருந்தால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை சந்திக்கவும். 

பிரக்னன்சி டைம்ல வெள்ளைப்படுதல்

தொடர்ச்சியாக பிறப்புறுப்பில் இருந்து தெளிவான திரவம் வெளியேறுதல். 

இது மாதிரியான எந்த ஒரு அறிகுறி இருந்தாலும் நீங்கள் உடனடியாக மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். 

தொற்றுகளை தவிர்ப்பதற்கு கர்ப்பிணி பெண்கள் பின்பற்ற வேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:- 

*அடிக்கடி கைகளை கழுவுவதன் மூலமாக நல்ல சுகாதாரத்தை பராமரிக்கவும். இவ்வாறு செய்வது தொற்றுகள் பரவுவதை தவிர்க்க உதவும். 

*வழக்கமான முறையில் குளித்து உங்களுடைய உள்ளாடைகளை தினமும் மாற்றுங்கள். இது பாக்டீரியா காரணமாக ஏற்படும் தொற்றுகளில் இருந்து உங்களை பாதுகாக்கும். 

*உங்களுடைய உள்ளாடைகள் மெலிதாக, காற்று எளிதாக உள்ளே சென்று வெளியேறக் கூடிய வகையில் காட்டன் துணியால் ஆனதா என்பதை உறுதிப்படுத்தவும். 

*ஒவ்வொரு முறை சிறுநீர் கழித்த பிறகும் உங்கள் பிறப்பு உறுப்பு பகுதியை சுத்தமாக கழுவகவும்.

*பிறப்பு உறுப்பு பகுதியில் எந்த ஒரு காஸ்மெட்டிக் அல்லது கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் இது வீக்கத்திற்கு வழிவகுக்கும். 

*ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது அவசியம். பாஸ்சுரைஸ் செய்யப்படாத பால் மற்றும் சமைக்கப்படாத அல்லது சரியாக சமைக்கப்படாத இறைச்சிகளை தவிர்க்கவும்.

*முடிந்த அளவு வெள்ளை சர்க்கரை சாப்பிடுவதை தவிர்க்கவும். 

*பாலியல் உறவு மூலமாக பரவும் தொற்றுகளை தவிர்ப்பதற்கு காண்டம் பயன்படுத்தவும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Nayanthara and Vignesh Shivan viral video சோதிக்காதிங்கடா…விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன்…வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!
  • Views: - 208

    0

    0