எந்த ஒரு ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட குறிப்பாக இருந்தாலும் அதில் நிச்சயமாக நீங்கள் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற ஆலோசனையை கேட்டிருக்க வேண்டும். ஆனால் இப்போது அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதால் பிரச்சனைகளை அனுபவிப்பது பற்றிய தகவல்கள் வெளியாகி வருகிறது. அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதால் பல்வேறு விதமான பக்க விளைவுகள் ஏற்படலாம். இது ஆங்கிலத்தில் வாட்டர் இன்டாக்ஸிகேஷன் என்று அழைக்கப்படுகிறது.
வாட்டர் இன்டாக்ஸிகேஷன் என்பது நம்முடைய உடலில் தண்ணீர் நச்சாக மாறும் ஒரு நிலை. ஒரு குறுகிய காலகட்டத்தில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதால் உடலில் எலக்ட்ரோலைட் சமநிலை இல்லாமல் மாறி அதனால் உடலுக்கு மிகப்பெரிய பிரச்சனைகள் ஏற்படும் நிலை இது. உடலில் நடைபெறும் வழக்கமான செயல்பாடுகளை பாதிப்பது மட்டுமல்லாமல் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் அமைகிறது. நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம் தான், ஆனால் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பது மோசமான அபாயங்களை ஏற்படுத்தும்.
குமட்டல் மற்றும் வாந்தி
நீங்கள் அதிக அளவு தண்ணீர் பருகி உள்ளீர்கள் என்பதற்கான முதல் அறிகுறி குமட்டல். இது பிறகு வாந்தியை ஏற்படுத்தலாம். உங்கள் உடலில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் செல்லும் பொழுது அந்த அதிகப்படியான திரவம் வயிற்றை உப்புசமாக மாற்றி, அசௌகரியத்தை ஏற்படுத்தும். இந்த அசௌகரியம் அதிகப்படியான தண்ணீரை வெளியேற்றுவதற்கு குமட்டல் மற்றும் வாந்தியை உண்டாக்கும்.
தலைவலி
அடிக்கடி தலைவலி ஏற்படுவதும் நீங்கள் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்து உள்ளீர்கள் என்பதற்கான அறிகுறி. உடலில் எலக்ட்ரோலைட் சமநிலை இல்லாமல் இருந்தால் அது அளவுக்கு அதிகமான தண்ணீர் உட்கொள்ளலால் ஏற்படுகிறது. இதனால் மூளை தற்காலிகமாக வீங்கி தலைவலியை ஏற்படுத்தும்.
குழப்பம் மற்றும் கவனச் சிதறல்
குழப்பம் மற்றும் கவன சிதறல் போன்ற அறிவுத் திறன் சார்ந்த அறிகுறிகள் அளவுக்கு அதிகமான தண்ணீரின் விளைவாக ஏற்படுகிறது. எலக்ட்ரோலைட் சமநிலையின்மை அதிலும் குறிப்பாக சோடியம் மூளையின் செயல்பாட்டை பாதிக்கிறது. இது குழப்பம், கவனிச்சதறல் போன்ற அறிகுறிகளுடன் மோசமான சூழ்நிலையில் வலிப்பு கூட உண்டாக்கலாம்.
வீக்கம்
அளவுக்கு அதிகமாக நீங்கள் தண்ணீர் குடிக்கும் பொழுது அந்த திரவத்தை தக்க வைத்ததன் விளைவாக உடலில் வீக்கம் ஏற்படும். அதிலும் குறிப்பாக கைகள், கால்கள் மற்றும் முகத்தில் இந்த வீக்கம் காணப்படும்.
இதையும் படிக்கலாமே: இனியும் உங்க குழந்தைகளுக்கு காசு கொடுத்து கேன்சர் வாங்கி கொடுக்காதீங்க!!!
தசை வலி
தசைகளில் வலி ஏற்படுவதும் அளவுக்கு அதிகமான தண்ணீரின் ஒரு அறிகுறி. உடலில் சோடியம் கறையும் பொழுது அது ஹைப்போனெட்ரீமியா என்ற நிலையை ஏற்படுத்துகிறது. இது சோடியம் அளவுகள் மிகவும் குறைந்ததால் ஏற்பட்ட ஒரு நிலையாகும். இந்த எலக்ட்ரோலைட் சமநிலையின்மையால் தசைகளில் சுளுக்கு, வீக்கம் மற்றும் மோசமான சூழ்நிலைகளில் இதயத்தின் செயல்பாட்டை கூட பாதிக்கலாம்.
எனவே போதுமான அளவு தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமான ஒரு விஷயமாக இருந்தாலும் நீங்கள் அதன் அளவில் கவனம் செலுத்துவது அவசியம். ஒரு நாளைக்கு 8 கிளாஸ் தண்ணீர் சராசரியாக போதுமான அளவாக கருதப்படுகிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…
சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
This website uses cookies.