ஃபிரிட்ஜில் முட்டைகளை வைக்கும் பழக்கம் உங்களுக்கு இருக்கா… நீங்க ஃபாலோ பண்ண வேண்டிய சில விஷயங்கள் இதோ!!!

Author: Hemalatha Ramkumar
15 April 2023, 7:28 pm

குளிர்சாதனப்பெட்டியில் முட்டைகளை சேமிக்கும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், ஒரு சில டிப்ஸ்களை பின்பற்றுவது முட்டைகள் கெடாமல் இருக்க உதவுகிறது. குளிர்சாதன பெட்டியில் முட்டைகளை சேமிப்பதற்கான சிறந்த வழியை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவற்றை பின்பற்றாமல் போனால் அவை விரைவாக கெட்டுவிடும். பொதுவாக முட்டைகளை வாங்கிய மூன்று வாரங்களுக்குள் பயன்படுத்துவது சிறந்தது. ஒரு வேலை நீங்கள் முட்டைகளை குளிர்சாதன பெட்டியில் சேமிக்க வேண்டும் என்றால் உங்களுக்கான குறிப்புகள் இதோ:-

  1. குளிர்சாதனப் பெட்டியின் கதவில் முட்டைகளை சேமிப்பதைத் தவிர்க்கவும். ஏனெனில், இது வெப்பநிலை ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தலாம்.
  2. முட்டைகளுக்கென்ற தனி பாக்சில் அவற்றை சேமிக்கவும். ஏனெனில் இது குளிர்சாதன பெட்டியில் உள்ள பிற உணவுகளில் இருந்து வெளிவரும் சுவைகள் மற்றும் நாற்றங்களை உறிஞ்சுவதிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
  3. முட்டைகளை குளிர்ச்சியான மற்றும் உலர்ந்த இடத்தில் வைக்கவும். குளிர்சாதனப் பெட்டியின் பின்புறம் போன்ற குளிர்சாதனப் பெட்டியில் உள்ள சூடான இடங்களுக்கு அருகில் முட்டைகளை சேமித்து வைப்பதைத் தவிர்க்கவும். ஏனெனில், அவை விரைவாக கெட்டுவிடும்.
  4. முட்டைகளின் காலாவதி தேதியை சரிபார்த்து, காலாவதி ஆன முட்டைகளை தூக்கி எறியவும்.
  5. குளிர்சாதனப்பெட்டியில் முட்டைகளை சேமிப்பதற்கு முன் அவற்றைக் கழுவுவதைத் தவிர்க்கவும். ஏனெனில் இது எளிதில் பாக்டீரியா மாசுபாட்டினை ஏற்படுத்தக்கூடும்.
  6. முட்டைகளை வாங்கிய உடனேயே குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். 4 டிகிரி செல்சியஸுக்கும் குறைவான வெப்பநிலையில் அவற்றை சேமிக்க வேண்டும்.
  7. முட்டையை வாங்கிய மூன்று வாரங்களுக்குள் சாப்பிட்டு விடுவது நல்லது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Ethirneechal Serial Fans are shocked and stop to watch என்ன கொடுமை இது ஈஸ்வரி.. எதிர்நீச்சல் சீரியலை பார்ப்பதையே நிறுத்திட்டேன்!