காபி குடித்தால் உடல் எடையை குறைக்க முடியுமா…? உங்கள் கேள்விக்கான பதிலை இந்த பதிவில் பார்ப்போம். காபி ஒரு சிறந்த ஆற்றல் ஊக்கியாக செயல்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. கலோரிகள் குறைவாக இருப்பதால், காபி என்பது எடை இழப்புக்கு உகந்த பானமாகும். இதில் பல நன்மைகள் உள்ளன.
பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆராய்ச்சி மூலம், ஒரு கப் காபியை தொடர்ந்து சாப்பிடுவது நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமான எடை நிர்வாகத்தை ஊக்குவிக்கிறது என்பது தெரிய வந்துள்ளது.
உங்கள் வொர்க்அவுட்டிற்கு முன்னும் பின்னும் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது முக்கியமானது. ஏனெனில் இது மீட்பு மற்றும் உடல் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. உங்கள் வொர்க்அவுட்டைத் சிறந்த முறையில் செய்வதற்கு சிறந்த ஆற்றல் ஊக்கியாக காபி உள்ளது. உடற்பயிற்சி செய்வதற்கு குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு முன் பிளாக் காபி குடிப்பது வேகமாக கொழுப்பு இழப்புக்கு உதவுவதோடு, அதிக வியர்வையை வெளியேற்றும் ஆற்றலையும் வழங்குகிறது.
எடை இழப்பை ஊக்குவிக்கும் முதல் விதி, நீங்கள் சாப்பிடுவதை விட அதிக கலோரிகளை எரித்து கலோரி பற்றாக்குறையை உருவாக்குவதாகும். அவ்வாறு செய்வதற்கான ஒரு வழி, கவனத்துடன் குறைந்த கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்வது அல்லது மிதமான அளவு உணவுகளை சாப்பிடுவது மிக முக்கியம்.
கொழுப்பு இழப்பு மற்றும் எடை குறைப்பு ஆகியவை உங்கள் வளர்சிதை மாற்றம் உண்மையில் எவ்வளவு வேகமாக அல்லது மெதுவாக உள்ளது என்பதைப் பொறுத்தது. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க பல இயற்கை வழிகள் இருந்தாலும், காபி ஒரு சிறந்த வழி ஆகும். சமீபத்திய ஆய்வுகள், காஃபின், பொதுவாக, பிஎம்ஐயை சமப்படுத்தவும், வளர்சிதை மாற்றத்தை திறம்பட துரிதப்படுத்தவும் செயல்படுகிறது என்பதை நிறுவியுள்ளது.