மலேரியா பாதிப்புகள்: ஒரு சின்ன கொசு என்னென்ன வேலை பண்ணுது பாருங்க!!!

Author: Hemalatha Ramkumar
3 May 2023, 10:03 am

மலேரியா என்பது பெண் அனாபிலிஸ் கொசு கடிப்பதால் பரவும் நோய் என்பது நாம் அறிந்ததே. இந்த கொசு பிளாஸ்மோடியம் விவாக்ஸ் என்ற வைரஸை பரப்புகிறது. அது கடித்த பிறகு, நம் உடலில் நோய்த்தொற்று ஏற்படுகிறது. பின்னர் மலேரியாவின் அறிகுறிகள் நமது உடலில் தோன்றத் தொடங்குகின்றன. மலேரியாவின் போது உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் மலேரியாவுக்குப் பிறகு என்ன நடக்கிறது என்பது பற்றி யாருக்கும் தெரியாது. இது குறித்து இன்று தெரிந்து கொள்வோம். மலேரியாவுக்குப் பிறகு உடலில் ஏற்படும் பாதிப்புகள்:

மலேரியாவின் போது, உடலில் சிவப்பு இரத்த அணுக்கள் (RBC’s) இழப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக, உடலில் இரத்த சோகை ஏற்படுகிறது. இதன் காரணமாக, பெரும்பாலான மக்கள் பலவீனம், நீடித்த சோர்வு மற்றும் தசை வலி உள்ளிட்ட முதுகுவலியை அனுபவிக்கின்றனர்.

மண்ணீரல், நிணநீர் மண்டலத்தின் ஒரு அங்கமாகும். மண்ணீரல் லிம்போசைட்டுகளை உருவாக்குகிறது. அவை இரத்தத்தை வடிகட்டுகின்றன மற்றும் இரத்த திசுக்களை சேமிக்கின்றன. மலேரியா வரும்போது பழைய ரத்த நாளங்கள் அழிந்து மண்ணீரல் கெட்டுப்போக ஆரம்பிக்கும். இது உடலில் இரத்த சுத்திகரிப்பு செயல்முறையை பாதிக்கிறது.

மலேரியாவுக்குப் பிறகு, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது. நம் உடலால் தன்னைத் தானே சரிசெய்து கொள்ள முடியாது. அதனால்தான் மலேரியாவுக்குப் பிறகு அடிக்கடி நோய்வாய்ப்பட நேரலாம். இது தவிர, மலேரியா வந்த பிறகு, உடலில் பல்வேறு அறிகுறிகளைக் காண்பீர்கள். எனவே, மலேரியா நோய் வராமல் தவிர்க்க போதுமான நடவடிக்கைகளை எடுக்கவும். வீட்டில் கொசுக்கள் வராமல் பார்த்து கொள்ளுங்கள். மேலும், மலேரியாவுக்குப் பிறகு அதிக புரத உணவை எடுத்துக் கொள்ளுங்கள். முடிந்த வரை இந்த நோயைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • national award missed for paradesi movie because of bala video தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?