புஜங்காசனம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் என்ன???
Author: Hemalatha Ramkumar18 October 2022, 12:04 pm
யோகா பயிற்சியானது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் இருந்து உடலின் முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்துவது வரை பல நன்மைகளைத் தருகிறது. யோகாவின் எளிதான ஆசனங்களில் ஒன்று புஜங்காசனம் அல்லது கோப்ரா போஸ். இந்த பதிவில் புஜங்காசனம் அல்லது கோப்ரா போஸ் செய்வதால் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
ஆஸ்துமா மற்றும் பதட்டம்:
இந்த ஆசனம் மார்பு குழியைத் திறந்து நுரையீரலை விரிவடையச் செய்து இதயத்தை பதட்டத்தை போக்க உதவுகிறது. புஜங்காசனம் ஆஸ்துமா மற்றும் அலர்ஜியை அற்புதமாக சிதறடிக்கும் ஆசனங்களில் ஒன்று.
அதிக வலிமை மற்றும் நெகிழ்வுத்தன்மை: உங்கள் முதுகெலும்பு, குளுட்டியல் தசைகள், தொடைகள் மற்றும் தோள்களை வலுப்படுத்த கோப்ரா போஸைப் பயிற்சி செய்யுங்கள். புஜங்காசனம் முதுகுவலிக்கு இயற்கையான தீர்வாகும்.
ஆரோக்கியமான குடல்:
இந்த ஆசனத்தில் உடலின் முன்பகுதி நீட்டப்பட்டு, வயிற்று உறுப்புகளின் உகந்த செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. அதே நேரத்தில், கீழ் முதுகு சுருக்கப்பட்டு சிறுநீரகங்களின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மேலும் ஆரோக்கியமான குடல் கிடைக்கிறது.
மனநிலையை மேம்படுத்த உதவும்:
இந்த ஆசனம் உடலில் இருந்து சோர்வைப் போக்கி, மனதை அமைதிப்படுத்துகிறது. இதன் மூலம் உங்கள் மனநிலையை மேம்படுத்துகிறது.