நீரிழிவு நோயாளிகள் இந்த ஒரு பழத்தை சாப்பிட்டாலே போதும்… சர்க்கரை அளவை விரைவில் கட்டுப்படுத்தி விடலாம்!!!

Author: Hemalatha Ramkumar
26 May 2023, 3:45 pm

அத்திப்பழங்களில் அதிகப்படியான வைட்டமின்களும், தாது சத்துக்களும், உடலுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்து இருக்கின்றது என்பது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் உலர்ந்த அத்திப்பழத்திலும் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.

100 கிராம் அத்திப்பழத்தில் தோராயமாக 90 கலோரிகள் ஆற்றல் உள்ளது. மேலும்
புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் – 20 கிராம், நார்ச்சத்து – 2 கிராம், இரும்பு சத்து – 4 மில்லி கிராம், தயாமின் – 1 மில்லி கிராம், கால்சியம் – 250 மில்லி கிராம், பொட்டாசியம் – 220 மில்லி கிராம், சோடியம் – 2 மில்லி கிராம், பாஸ்பரஸ் – 15 மில்லி கிராம், மெக்னீசியம் –20 மில்லி கிராம், வைட்டமின் சி – 12 மில்லி கிராம், வைட்டமின் இ – 0.7 மில்லி கிராம், கொழுப்பு– 300 மில்லி கிராம் மற்றும் சர்க்கரை 15 கிராம் ஆகியவை அடங்கியுள்ளன.

தினமும் ஒரு அத்திப்பழம் உண்பதால் நமது உடலுக்கு அதிக ஆரோக்கியம் நன்மைகள் ஏற்படுகின்றன அவற்றில் சில:

இரத்தத்தில் உள்ள ட்ரை கிளிசரைடுகள் இரத்தக்குழாயில் கொழுப்பு துகள்களாக சேர்ந்து இரத்த ஓட்டத்தை தடை செய்து மாரடைப்பை ஏற்படுத்துகின்றன. அத்திப்பழம் ரத்தத்தில் உள்ள ட்ரை கிளிசரைடுகளின் அளவை குறைக்கிறது.

புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய் போன்ற நாள்பட்ட நோய்களுக்கு ப்ரீ ரேடிகல்கள் முக்கிய காரணமாக உள்ளன. இவற்றை கட்டுப்படுத்த ஆன்ட்டி ஆக்சிடன்ட்கள் தேவைப்படுகின்றன. அத்திப்பழத்தில் இந்த ஆன்ட்டி ஆக்சிடன்ட்கள் காணப்படுகிறது. எனவே அத்திப்பழம் புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது.

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் பொட்டாசியம் சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. அத்திப்பழத்தில் போதுமான அளவு பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளது. எனவே இரத்த அழுத்தத்தை குறைத்து, கட்டுக்குள் வைக்கிறது.

நார்ச்சத்து குறைபாட்டினால் நமது உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்ந்து உடல் எடையை அதிகரிக்க செய்கிறது. அத்திப்பழத்தில் போதுமான அளவு நார்ச்சத்து இருப்பதால் இந்த தேவையற்ற கொழுப்புகளை குறைத்து உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது. மேலும் செரிமான இயக்கத்தை எளிதாக்கி மலச்சிக்கலை தடுக்கிறது.

விந்தணுக்களின் உற்பத்தியில் மெக்னீசியம், துத்தநாகம், மங்கனிசு போன்ற தாது சத்துக்கள் தேவைப்படுகின்றன. அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் அதிகமாக காணப்படுவதால் விந்தணுக்களின் உற்பத்தியில் பங்களிக்கிறது. அத்திப்பழத்தில் உள்ள கால்சியம் சத்து எலும்புகளை பலப்படுத்தி ஆரோக்கியமாக வைக்கிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • ajith kumar changed the lyrics of god bless u song in good bad ugly அது வேண்டாம் இதை வச்சிக்கோ- இந்த பாடல் வரியை மாற்றியது அஜித்தா?