தினமும் ஒரு கைப்பிடி அளவு சாதம் கூடுதலா சமச்சாலே பாதி நோய் குணமாகிடும்… எப்படின்னு கேக்குறீங்களா???

Author: Hemalatha Ramkumar
26 May 2023, 6:10 pm

முதல் நாள் சமைத்த அரிசி சாதத்தில் இரவு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கும் போது அடுத்த நாள் கிடைக்கும் அந்த சாதம் பழைய சாதம் எனப்படுகிறது. மேலும் இது நீச்ச தண்ணி, நீராகாரம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த பழைய சாதம் லேசான புளிப்பான சுவையை கொண்டுள்ளது. இதற்கு காரணம் இதில் உருவாகக்கூடிய லேக்டிக் அமில பாக்டீரியா ஆகும்.

இந்த பழைய சாதத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் வைட்டமின்கள் அடங்கியுள்ளன. வேறு எந்த உணவுப் பொருட்களுடன் ஒப்பிடும் போது பழைய சாதத்தில் மிக அதிகப்படியான சத்துக்கள் அடங்கியுள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை கூறுகிறது. அதோடு, மிக அதிக அளவில் புரதச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம் ஆகியவை இதில் அடங்கியுள்ளன.

புதிதாக சமைக்கப்பட்ட சாதத்தை விட பழைய சாதத்தில் 20 மடங்கு இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. எடுத்துக்காட்டாக புதியதாக சமைக்கப்பட்ட சாதத்தில் 5 கிராம் இரும்புச்சத்து இருக்கிறது எனில், பழைய சாதத்தில் 100 கிராம் அளவிற்கு இரும்பு சத்து அடங்கியுள்ளது.

நமது உடலில் ஏற்படும் பெரும்பாலான நோய்களுக்கு மூல காரணம் நமது உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் ஆகும். பழைய சாதத்துடன் சிறிது தயிர் மற்றும் சிறிய வெங்காயத்தை சேர்த்து தினமும் காலையில் உண்பதால் நம் உடலில் உள்ள உஷ்ணம் குறைக்கப்பட்டு நம் உடலுக்கு அதிகப்படியான நன்மைகள் ஏற்படுகிறது.

உடலில் உள்ள அதிக வெப்பம் காரணமாக ஏற்படும் கண் எரிச்சல், நீர் சுருக்கு, உடல் சோர்வு, சிறுநீர் வெளியாகும் போது எரிச்சல் போன்ற உடல் உபாதைகள் மிக விரைவில் குணமடைகிறது. குடல் புண்ணை விரைந்து குணப்படுத்துவதில் பழைய சாதம் மிகச்சிறந்தது. பழைய சாதத்தை தினமும் காலை உணவாக உண்டு வந்தால் அல்சர் எனப்படும் குடல் புண் விரைந்து குணமாகிறது.

பழைய சாதத்தில் மிக அதிக அளவு நார்ச்சத்துக்கள் அடங்கியுள்ளன. நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ள உணவுகள் எளிதில் செரிமானம் ஆகிறது மற்றும் செரிமான உறுப்புகளை பலப்படுத்துகிறது. மேலும் உடலில் மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது.

பழைய சாதத்தில் B6 மற்றும் B12 ஆகிய சத்துக்கள் அதிகளவில் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. எனவே பழைய சாதம் உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து எந்த வித நோயும் நம்மை எளிதில் தாக்காதவாறு பார்த்துக் கொள்கிறது.

பழைய சாதத்தில் உடலுக்கு நன்மையை விளைவிக்கக் கூடிய பாக்டீரியாக்கள் மற்றும் நுண்ணுயிரிகள் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்த நுண்ணுயிரிகள் வயிறு தொடர்பான சிக்கல்களை சரி செய்கின்றன. மேலும் ஒவ்வாமை பிரச்சினையை எளிதில் தீர்க்கிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Dragon Beat Vidaamuyarchi Movie Collection விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!