கால்சியம் நிறைந்த பலாக்கொட்டை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!!!
Author: Hemalatha Ramkumar22 May 2023, 7:23 pm
பொதுவாக நாம் உண்ணும் பழங்களை விட அந்த பழங்களின் கொட்டைகளில் தான் அதிக மரபணு கூறுகள் அடங்கியிருக்கின்றன என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பலாக்கொட்டையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், விட்டமின் ஏ, பி, மற்றும் சி, போன்ற உடலுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன மேலும் துத்தநாகம், மாங்கனீஸ், தாமிரம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற உடலுக்கு அத்தியாவசியமான கனிம சத்துக்களும் அடங்கி இருக்கின்றன.
பலாக்கொட்டையில் இருக்கக்கூடிய லிக்நொன்கள், ஐசோபிரோன்கள், சப்போனியம்கள் போன்றவை புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடிய ஆற்றல் வாய்ந்தவை. மேலும் செல் முதிர்ச்சியை குறைத்து, புதிய செல்களின் வளர்ச்சியை தூண்ட கூடியவை. இவற்றில் இருக்கக்கூடிய பிலேமனாய்டுகள் உடம்பில் இருக்கக்கூடிய இரத்தக்கட்டு மற்றும் வீக்கம் போன்றவற்றை குணப்படுத்தக்கூடியது. மேலும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
பலாக்கொட்டைகளை அதிகம் உண்பாதால் இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பு அடைப்புகள் கரைக்கப்பட்டு, இரத்த ஓட்டம் சீராக வைக்கப்படுகிறது. இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் இதய தசைகள் பலப்படுத்தப்படுகின்றன. இதனால் மாரடைப்பு போன்ற இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறைக்கப்படுகிறது.
பலாக்கொட்டைகளை உண்பதால் நமது உடலில் டெஸ்டோஸ்டிரோன் சுரக்கும் அளவு அதிகரிக்கப்படுகிறது. இதனால் நமது உடலில் உள்ள தசைகள் நன்கு வலுப்பெறுகின்றன.
மேலும் இவற்றில் கால்சியம் சத்தும் அதிகம் இருப்பதால் எலும்புகள் வலுப்பெறுகின்றன மற்றும் மூட்டு வலி, மூட்டு தேய்மானம் போன்றவை குறைக்கப்படுகின்றன.
அதிகப்படியான உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பலாக்கொட்டையை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இவற்றில் இருக்கக்கூடிய நார்ச்சத்துக்கள் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து சிறுநீர் போன்ற கழிவுகளுடன் வெளியேற்றுகிறது.
பலாக்கொட்டையில் இருக்கக்கூடிய பொட்டாசியம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி சீராக வைக்கிறது. அதிகப்படியான இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.
பலாக்கொட்டையில் இயற்கையாகவே பல வகையான சத்துக்கள் அடங்கி உள்ளன. இவற்றில் இருக்கக்கூடிய ரிபோ புளோமின் மற்றும் தயாமின் ஆகிய சத்துக்கள் கண் பார்வையை நன்றாக வைக்கின்றன.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.