சுட்டெரிக்கும் கோடைக்காலம், உடனடி ஆற்றலைப் பெறுவதற்கும் ஒட்டுமொத்த நல்வாழ்வை உறுதி செய்வதற்கும் சில புத்துணர்ச்சியூட்டும் மற்றும் ஈரப்பதமூட்டும் பானங்கள் தேவைப்படுத்துகிறது. பலர் தங்களின் தாகத்தைத் தணிக்க எலுமிச்சைப்பழம் மற்றும் கரும்புச் சாற்றை பருகுகின்றனர். உங்கள் கோடைகால உணவில் ஆரோக்கியமான பானங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. இந்த கோடை காலத்திற்கு ஏற்றதாக இருக்கும் வில்வ ஜூஸை உட்கொள்வதால் ஏற்படும் சில ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
*வில்வம் நார்ச்சத்து நிறைந்த பழம். கடுமையான மலச்சிக்கல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது.
*நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், வில்வ ஜூஸில் 140 ஆரோக்கியமான கலோரிகள் இருப்பதால், எடை இழப்புக்கு நல்லது.
*இந்த கோடைகால சாறு புரதங்கள், பீட்டா கரோட்டின், ஃபைபர், ரிபோஃப்ளேவின் மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க காரணமாகின்றன.
*வில்வ சாறு கொலஸ்ட்ரால் அளவுகள், மற்றும் ட்ரைகிளிசரைடுகள் அளவுகளை பராமரிக்கவும் உதவும்.
*வெப்பமான காலநிலை வயிற்றில் அமில வீக்கத்திற்கு வழிவகுக்கும். இது போன்ற ஒரு சூழ்நிலையில், அதன் குளிரூட்டும் பண்புகள் காரணமாக வில்வ சாறு உட்கொள்வது வீக்கத்திலிருந்து விடுபட உதவும்.
வீட்டில் வில்வ ஜூஸ் செய்வது எப்படி?
* வில்வ பழத்தை உடைத்து, கூழை எடுக்கவும்.
*பழத்திலிருந்து கூழை மட்டும் பிரித்து, விதைகளை பிரித்து எடுத்துக் கொள்ளவும்.
*பெரிய வடிகட்டியில் வடிக்கவும். இப்போது அதனுடன் வெல்லம் மற்றும் சீரகத்தூள் சேர்க்கவும். குடித்து மகிழுங்கள்!