இன்று பலர் கொலஸ்ட்ரால் பிரச்சனையை அனுபவித்து வருகின்றனர். பொதுவாக கொலஸ்ட்ரால் என்றாலே அது ஒரு தீங்கு விளைவிக்கும் பொருள் என்ற பொதுவான கருத்து உள்ளது. ஆனால் கொலஸ்ட்ரால் என்பது இரு வகைப்படும்- ஒன்று அதிக அடர்த்தி கொண்ட HDL அல்லது நல்ல கொலஸ்ட்ரால், மற்றொன்று குறைந்த அடர்த்தி கொண்ட LDL அல்லது கெட்ட கொலஸ்ட்ரால். இந்த இரண்டு கொலஸ்ட்ராலின் சமநிலை பாதிக்கப்படும் பொழுது அது நம்முடைய உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும். LDL அல்லது கெட்ட கொலஸ்ட்ரால் நம்முடைய உடலில் அதிகமாகும் பொழுது அதனால் மோசமான பிரச்சனைகள் வரலாம். போதுமான அளவு ஓய்வு எடுக்காமல் ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிட்டுக் கொண்டு சுறுசுறுப்பாக இல்லாத வாழ்க்கை முறையின் காரணமாக கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக சேரலாம்.
போதுமான அளவு தூக்கம் அல்லது ஓய்வு என்பது நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியம். இது கொலஸ்ட்ரால் அளவையும் பாதிக்கும். நீங்கள் போதுமான அளவு தூங்க விட்டால் அதனால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகலாம். மோசமான வாழ்க்கை முறையின் காரணமாகவும் கொலஸ்ட்ரால் அதிகமாகி, வாழ்க்கை நரகமாக வாய்ப்புள்ளது. இப்போது இவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் கொலஸ்ட்ராலை எப்படி குறைப்பது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கெட்ட கொலஸ்ட்ராலை பெருங்காயத் தண்ணீர் குடிப்பதன் மூலமாக நம்முடைய உடலில் இருந்து நீக்கலாம். ரத்த ஓட்டம் தடைபடும் பொழுது HDL அல்லது நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது. இந்த ரத்தம் உடல் முழுவதும் உள்ள உறுப்புகளில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றுகிறது. எனவே வெறும் வயிற்றில் தினமும் பெருங்காய தண்ணீர் குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் வெளியேற்றப்பட்டு உடல் ஆரோக்கியமாகும். ஆனால் இதனை நீங்கள் தினமும் ஒரு சில நாட்களுக்கு செய்து வந்தால் மட்டுமே நல்ல முடிவுகளை பெற முடியும்.
கொலஸ்ட்ராலை மட்டுமல்லாமல் பெருங்காயத் தண்ணீர் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. ஏனெனில் பெருங்காயத்தை நீர் நமது உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது. இதனால் நீங்கள் விரைவாக உடல் எடையை குறைக்கலாம்.
குளிர் காலத்தில் அடிக்கடி சிலருக்கு சளி பிடித்துக் கொள்ளும். இதற்கு பெருங்காய தண்ணீர் ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. இது சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை உங்களிடமிருந்து தூர விலக்கி வைத்து சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்கிறது.
இதையும் படிக்கலாமே: வறண்ட தோலுக்கு இனி காஸ்ட்லி லோஷன் எல்லாம் வேண்டாம்… தேங்காய் எண்ணெய் ஒன்னு போதும்!!!
பெருங்காயத்தில் உள்ள வீக்க எதிர்ப்பு பண்பு தலைவலி பிரச்சனையை சமாளிப்பதற்கு உதவுகிறது. தலையில் உள்ள ரத்த நாளங்களில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து தலைவலியிலிருந்து நிவாரணம் தருகிறது. உங்களுக்கு தலைவலி ஏற்படும் போது சிறிதளவு பெருங்காயத்தை தண்ணீரில் கலந்து பருகுவதன் மூலமாக உடனடி நிவாரணம் பெறலாம்.
ஒரு சில பெண்களுக்கு மாதவிடாயின் போது கடுமையான வயிற்று வலி இருக்கும். வயிற்று வலி மட்டுமல்லாமல் முதுகு வலியையும் சேர்த்து போக்குவதற்கு பெருங்காய தண்ணீர் சிறந்த முறையில் உதவும். இது உடலுக்கு சீரான ரத்த ஓட்டம் கிடைப்பதை உறுதி செய்கிறது. இதனால் உங்களுடைய வலி பறந்து போகும்.
இறுதியாக டயாபடீஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கும் இந்த பெருங்காய தண்ணீர் உதவும். ரத்த சர்க்கரை அளவை குறைத்து கணைய செல்களை தூண்டுவதன் மூலமாக அதிக இன்சுலின் உற்பத்தியை விளைவிக்கிறது. ஒருவேளை உங்களுக்கு பெருங்காயத்தை தண்ணீரில் கலந்து குடிக்க பிடிக்காவிட்டால் அதனை மோரில் கலந்து குடிக்கலாம். இதனை வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது.
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
This website uses cookies.