உலக கேரட் தினம் அன்று கேரட் பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம்!!!

Author: Hemalatha Ramkumar
4 April 2023, 10:51 am

ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 4 ஆம் தேதி உலக கேரட் தினம் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் கேரட்டை விரும்பி சாப்பிடுவார்கள். கேரட் சுவையாக இருப்பதுடன் ஏராளமான ஆரோக்கிய நன்மைஙளையும் வழங்குகிறது.

கண்பார்வையை அதிகரிக்க கேரட் உதவக்கூடும் என்று நம்மில் பலர் அறிந்திருக்கலாம். ஆனால் இந்த காய்கறியில் இன்னும் பல நன்மைகள் உள்ளன. இப்போது கேரட்டின் சில சிறந்த ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

கேரட்டில் காணப்படும் பீட்டா கரோட்டின் உடலில் வைட்டமின் A ஐ உற்பத்தி செய்ய உதவுகிறது. இது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பின் ஆரோக்கியத்தை அதிகரிக்க மிகவும் முக்கியமானது.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய்களுக்கு எதிராக கேரட் பாதுகாக்கும் என்று ஒரு ஆய்வு காட்டுகிறது. மேலும் கொழுப்பைக் குறைக்கவும் உதவும்.

பளபளப்பான சருமத்திற்கு தினமும் ஒரே ஒரு கேரட் சாப்பிட்டு வந்தால் போதும். உங்கள் சருமம் மென்மையாக அழகாக இருக்கும்.

வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் வீக்கத்தை எதிர்த்துப் போராட உதவுகின்றன. ஃபைபர் நாள்பட்ட நோயைத் தடுக்க உதவுகிறது. குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

கேரட்டில் காணப்படும் லுடோலின் மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. கேரட் நினைவாற்றலை அதிகரிக்க உதவுவது மட்டுமல்லாமல், அறிவாற்றல் வீழ்ச்சியைத் தடுக்கவும் உதவும். கண், மூளை மற்றும் சரும ஆரோக்கியத்தை கேரட் மேம்படுத்துகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!