கோடைக் காலம் வந்து விட்டாலே நம் அனைவரின் நினைவுக்கும் வருவது தர்பூசணிப் பழம் தான். இது சுவையாக இருப்பதோடு வெயிலை சமாளிக்கவும் உதவும். அதோடு இதில் ஏகப்பட்ட நன்மைகள் அடங்கி உள்ளன. ஆனால், எல்லாப் பழங்களும் இனிப்பாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆம், சில சமயம் நாம் தேர்ந்தெடுக்கும் பழம் சப்பென்று இனிப்பில்லாமல் இருக்கும். அதற்கு காரணம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? தெரிந்தால் நீங்கள் கண்டிப்பாக இனிப்பில்லாத பழங்களை எளிதில் கண்டு பிடித்து விடலாம். இதில் விஷயம் என்னவென்றால் தர்பூசணிப் பழங்களில் ஆண் தர்பூசணிப் பழம் பெண் தர்பூசணிப் பழம் என இரு வகைகள் உள்ளன. ஆச்சரியமாக உள்ளதா? ஆம், பொதுவாக இதில் ஆண் பழம் தான் இனிப்பில்லாமல் சப்பென்று இருக்கும். ஆனால், நீங்கள் ஆண் பழங்களை எவ்வாறு அடையாளம் காண முடியும்?
ஆண் தர்பூசணிப் பழங்களை எளிதில் அடையாளம் காண இயலும். இவை நீளமான வடிவத்தில் பெரியதாக காணப்படுகின்றன. பெரியதாக இருப்பதால் நம்மில் பலர் நம்மை அறியாமலேயே ஆண் பழங்களை தேர்வு செய்து விடுகிறோம். மறுபுறம் பெண் பழங்கள் மிகுந்த சுவையாக இருக்கும். இவை வட்ட வடிவத்தில் காணப்படுகின்றன. சரி, இப்பொழுது உங்களுக்கு விஷயம் புரிந்தது அல்லவா? இனி, வட்ட வடிவில் இருக்கும் பெண் தர்பூசணியை தேர்வு செய்து சுவைத்திடுங்கள். இதில் குறிப்பிடத்தக்க இன்னொரு விஷயம் என்னவென்றால், காம்பு பச்சையாக இருந்தால் அந்தப் பழங்களைத் தவிர்த்து விட. ஏனெனில், அவை முழுவதுமாக பழுப்பதற்கு முன்னரே பறிக்கப்பட்டவை.
தர்பூசணி சாப்பிடுவதால் உங்கள் உடல் நலம் நன்றாக இருக்கும். குறிப்பாக கோடை காலத்தில் ஏற்படும் நீர் இழப்பை சரி செய்ய உதவுகிறது. இது இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது. உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். இதனை தொடர்ந்து நீஎங்கள் உண்டு வந்தால், உங்கள் மன நிலை சற்று அமைதியாக இருக்கும். இப்படிப்பட்ட தர்பூசணிப் பழங்களை தினமும் எடுத்துக் கொண்டு பயன் அடையுங்கள். முன்பு சொன்னது போல் பெண் பழங்களை தேர்வு செய்யுங்கள். இனிப்பான பழங்களை அனுபவியுங்கள்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.