கொய்யாப் பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளது. கொய்யா இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் தேநீரும் இதற்கு சளைத்தது அல்ல.
பல விதமான ஆரோக்கிய நன்மைகள் வழங்கும் கொய்யா இலைகள் தேநீரின் செய்முறை மற்றும் அதன் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
கொய்யா இலைகள் தேநீர் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:-
கொய்யா இலைகள்
½ தேக்கரண்டி வழக்கமான டீ தூள்
1 ½ கப் தண்ணீர்
தேன் அல்லது வெல்லம்
செய்முறை:
*10 புதிய கொய்யா இலைகளை எடுத்து, இலைகளை நன்கு கழுவவும்.
*ஒரு பாத்திரத்தை எடுத்து, 1 ½ கப் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் 2 நிமிடம் கொதிக்க விடவும்.
*பின் கழுவிய கொய்யா இலைகளை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
*நிறம் மற்றும் சுவைக்காக ½ தேக்கரண்டி சாதாரண டீ தூளை சேர்க்கவும்.
*மேலும் 10 நிமிடம் கொதிக்க வைத்து தண்ணீர் ஊற்றி வடிகட்டவும்.
*கடைசியாக, தேன் அல்லது வெல்லத்தை இனிப்பானாகச் சேர்க்கவும்.
கொய்யா இலை தேநீரின் சில நம்பமுடியாத நன்மைகள்:-
●கொலஸ்ட்ராலை குறைக்கிறது:
உடலில் அதிக அளவு கொலஸ்ட்ரால் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும், குறிப்பாக இதயத்திற்கு இது மோசமானது. கொலஸ்ட்ரால் உடலில் இரத்த ஓட்டத்தை தடை செய்கிறது. கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதால் பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படலாம். கொய்யா இலை தேநீரை உட்கொண்ட பிறகு எட்டு வாரங்களுக்குப் பிறகு குறைந்த கொலஸ்ட்ரால் அளவைக் கொண்டிருப்பதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
●முகப்பருவை குறைக்கிறது:
முகப்பருவை போக்க நீங்கள் பல விதமான பொருட்களை முயற்சி செய்து வந்தாலும், வீட்டு வைத்தியங்கள் சிறந்தவை. குறிப்பாக, இதனால் பக்க விளைவுகள் ஏற்படாது. அந்த வகையில் கொய்யா இலை டீ போன்ற ஆரோக்கியமான பானங்களை தொடர்ந்து குடிப்பதன் மூலம் முகப்பரு பிரச்சனையை சிறந்த முறையில் குறைக்கலாம். இந்த இலைகளில் அதிக அளவு வைட்டமின் சி இருப்பதால், இது முகப்பருவை குணப்படுத்தும். மேலும் கொய்யா இலைகளை நசுக்கி, முகப்பரு இருக்கும் இடங்களில் தடவலாம்.
●முடி உதிர்வதைத் தடுக்கிறது:
அதிகரித்த மாசுபாடு, வானிலை மற்றும் சில முடி பிரச்சனைகள் காரணமாக, முடி உதிர்தல் என்பது இப்போது அதிகரித்து வரும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்றாகும். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட விலையுயர்ந்த சிகிச்சைகள் மற்றும் தயாரிப்புகளுக்கு பணம் செலவழிக்க தேவையில்லை. கொய்யா இலைகள் உங்கள் முடி தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் தடுக்கும். கொய்யா தேநீரைக் குடிப்பதைத் தவிர, கொதிக்க வைத்த இலைகளை உச்சந்தலையில் மசாஜ் செய்யலாம். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தலைமுடிக்கு அதிசயங்களைச் செய்யும். இருப்பினும், இதனை சூடாக பயன்படுத்தக்கூடாது. ஆற வைத்து பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
1
0