கோகம் பழம்: கோடைக்கு ஏற்ற இந்த பழம் பற்றி நாமும் அறிவோம்!!!

Author: Hemalatha Ramkumar
2 May 2023, 2:06 pm

கோடைகால வெயிலை சமாளிக்க ஏதாவது குளுமையாகவும், ஜூஸியாகவும் சாப்பிட வேண்டும் என்று நம் அனைவருக்கும் தோன்றும். எவ்வளவுதான் தண்ணீர் குடிப்பது, சுவையாக ஏதாவது சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்று யோசிப்பவர்களில் நீங்கள் ஒருவராக இருந்தால், உங்களுக்கான பழம் கோகம். இது கோடைகால சூப்பர் ஃபுரூட்டாக கருதப்படுகிறது. மங்குஸ்தான் குடும்பத்தைச் சேர்ந்த இந்த கோகம் பழம் கார்னிசியா இண்டிகா என்று அழைக்கப்படுகிறது.

இந்த பழத்தில் ஆன்டிஆக்சிடன்ட்கள் அதிக அளவில் காணப்படுகிறது. அதோடு
வைட்டமின் ஏ, வைட்டமின் பி3, வைட்டமின் சி, போலிக் அமிலம், கால்சியம் இரும்புச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீசு மற்றும் ஜிங்க் போன்ற எல்லா விதமான சத்துக்களும் கோகம் பழத்தில் காணப்படுகிறது.

இத்தனை சத்துக்கள் கொண்ட இந்த பழத்தில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் இருப்பதன் காரணமாக இது பாக்டீரியா மற்றும் வைரஸ் நோய் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

இனிப்பு சுவை நிறைந்த கோகம் பழமானது குறிப்பாக செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக அறியப்படுகிறது. அசிடிட்டி, செரிமான கோளாறு போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் கோகம் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.

கோகம் பழம் ஒரு இயற்கை குளிரூட்டியாக கருதப்படுகிறது. வெயிலை சமாளிக்க ஒரு டம்ளர் கோகம் ஜூஸ் குடித்தாலே போதும். சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து உங்களுக்கு நிவாரணம் அளித்து, உங்களை புத்துணர்ச்சி அடையச் செய்யும்.

கோகம் பழத்தில் குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து இருக்கிறது. அதோடு இதில் எந்தவிதமான கொலஸ்ட்ராலும் இல்லை. கோகம் பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் அதிக அளவில் காணப்படுகிறது. இதில் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு போன்ற தாதுக்கள் இருப்பதன் காரணமாக இது ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது.

சிறந்த ஆன்டி ஆக்சிடன்ட் ஆக செயல்படும் இந்த பழம் ஆன்ட்டி ஏஜிங் பண்புகளைக் கொண்டுள்ளது. உங்கள் சருமத்தில் ஏற்படும் வயதான அறிகுறிகளை எதிர்த்துப் போராடவும், திசு சேதத்தை எதிர்த்து போராடவும் உதவுகிறது.

கோகம் பழம் நீரழிவு நோயாளிகளுக்கும் சிறந்த உணவாக கருதப்படுகிறது. ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு அதிகரிப்பதை தவிர்க்க உதவும் இந்த பழம் டயாபட்டிஸ் மெலிட்டஸை நிர்வகிக்க உதவும் ஒரு அற்புதமான பழம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • my scenes were deleted in goat movie said by black padi சண்ட போட்டு படத்துல நடிச்சேன்; ஒரு பயனும் இல்ல- வேதனையில் GOAT பட நடிகர்… அடப்பாவமே!