தீராத வியாதிகளையும் தூசு போல விலகச் செய்யும் கோவக்காய்!!!
Author: Hemalatha Ramkumar4 May 2022, 6:57 pm
கோவக்காயின் இலை, வேர், காய், பழம் அனைத்திலும் மருத்துவ குணம் உண்டு. இதன் இலை, காயில் உள்ள குளுக்கோஸ், பாஸ்பேட் என்ற என்சைம் கல்லீரலில் செயல்பட்டு ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும். இது சர்க்கரை நோய்க்கு அருமருந்தாக திகழ்கிறது.
கோவக்காய் நாம் தினமும் அதிகளவு சாப்பிட்டு வந்தால் நம் உடலில் ஏற்படும் பலவகையான நோய்களை குணப்படுத்திவிட முடியும். இது அதிகமாக புதர்களில் வளர்கிறது. கோவக்காய் சாப்பிட்டால் தீரும் பிரச்சனைகள் பற்றி பார்ப்போம்.
தோல் பிரச்சனை:
கோவை இலைச்சாறு கருஞ்சீரகப்பொடி சேர்த்து அரைத்து படை மீது பூசி ஒரு மணி நேரம் கழித்து குளிக்கவும். கோவை இலையில் செய்த கசாயம் குடித்து வந்தால் சொறி, சிரங்கு குணமாகும்.
புண் விரைவில் குணமாகும்:
உடம்பில் ஏதேனும் புண்கள் இருப்பின் அவற்றின் மீது கோவை இலையை அரைத்து கட்டினால் புண் விரைவில் குணமாகும்.
பல் பிரச்சனை தீரும்:
பல் வலி, ஈறுகளில் வீக்கம், ரத்தக்கசிவு, மஞ்சள் கறை அனைத்தையும் கோவக்காய் ஜுஸ் சரி செய்கிறது.
உடல் வெப்பம் குறையும்:
கோவை இலையை கசாயம் செய்து குடித்து வருவதன் மூலமாக உடல் வெப்பம் சமநிலையில் இருக்கும்.
வாய்ப்புண் குணமாகும்:
வாய்ப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவக்காய் சேர்த்துக் கொள்ளலாம்.
வியர்குரு:
சிலருக்கு வியர்வை வெளியேறாமல் வேர்குருவாக நீர் கோர்த்துக் கொள்ளும். அப்படி வேர்க்குரு ஏற்பட்டால் கோவக்காயின் இலையை எடுத்து மை போன்று அரைத்து உடல் முழுவதும் பூசி சிறிது நேரம் கழித்து குளித்தால் வியர்குரு வராமல் தடுக்கலாம்.
பொடுகு குறைய உதவும்:
தலையில் பொடுகு, முடி உதிர்வது போன்ற பிரச்சனை உள்ளவர்கள். கோவக்காய் ஜுஸ் குடிப்பதோடு அரைத்த அந்த சக்கையை எலுமிச்சை சேர்த்து தடவி வந்தால் பொடுகு ஏற்படுவது குறைந்து விடும்.
கெட்ட கழிவுகளை அகற்றும்:
கடை சாப்பாடு மற்றும் மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகள் சாப்பிடுவதால் உடலில் கெட்ட கழிவுகள் அதிகரிக்கும். கோவக்காய் சாப்பிடும் போது, உடலில் உள்ள கெட்ட கழிவுகளை அகற்றுகிறது.
இப்படி கோவக்காயில் பலவிதமான சத்துக்களும், நன்மைகளும் உள்ளன. அதனால், கோவக்காய் சாப்பிட்டு உடம்பில் எந்த பிரச்சினையும் இன்றி ஆரோக்கியத்துடன் வாழுங்கள்.