MCT எண்ணெய் பற்றி கேள்விப்பட்டு இருக்கீங்களா… இதோட நன்மைகள் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!!
Author: Hemalatha Ramkumar22 March 2023, 10:33 am
MCT எண்ணெய் என்பது பல அறிவியல் அடிப்படையிலான ஆரோக்கிய நன்மைகளுடன் வரும் ஒரு உணவுப் பொருள் ஆகும். இது தேங்காய் எண்ணெய், பாமாயில் மற்றும் பால் பொருட்களில் காணப்படும் ஒரு வகை கொழுப்பாகும். MCT எண்ணெயானது நேரடியாக உங்கள் கல்லீரலுக்குச் செல்கின்றது. கல்லீரலில் அவை உடனடியாக ஆற்றல் மூலமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
MCT எண்ணெய் ஒரு கொழுப்பு என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே அதை அதிகமாக உட்கொள்வது உங்கள் எடை அதிகரிக்க வழிவகுக்கும். செரிமானக் கோளாறுகளைத் தடுக்க நீங்கள் அதை உணவுடன் எடுத்துக்கொள்ள வேண்டும். எனினும், எந்தவொரு சப்ளிமெண்ட்டையும் தொடங்குவதற்கு முன், நீங்கள் எப்போதும் உங்கள் மருத்துவரிடம் பேச வேண்டும். பொதுவாக, நீங்கள் ஒரு நாளைக்கு 1 டீஸ்பூன் என்ற கணக்கில் தொடங்கி படிப்படியாக ஒரு நாளைக்கு 2 தேக்கரண்டி வரை செல்லலாம்.
இருப்பினும், பெரும்பாலும், MCT ஆனது அபாயங்களை விட அதிக நன்மைகளைக் கொண்டுள்ளது. MCT எண்ணெய் உங்கள் ஆரோக்கியத்திற்கு என்னென்ன நன்மை பயக்கும் என்பதை இப்போது பார்க்கலாம்.
ஆற்றல் பூஸ்ட்
MCTகளை உடனடி ஆற்றல் மூலமாகப் பயன்படுத்தலாம். ஏனென்றால், மற்ற வகை கொழுப்பை விட உங்கள் உடல் MCTகளை எளிதில் உறிஞ்சிவிடும். எனவே நீங்கள் MCT எண்ணெயை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளும்போது, உடனடியாக ஆற்றல் ஊக்கத்தைப் பெறுவீர்கள். உங்கள் கல்லீரல் அந்த MCTகளை கீட்டோன்களாக மாற்றுகிறது. உங்கள் செல்கள் கீட்டோன்களை எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
MCT எண்ணெய் உங்கள் உடல் கொழுப்பு மற்றும் கலோரிகளை எரிப்பதன் மூலம் மற்றும் கீட்டோன்களை உருவாக்குவதன் மூலம் உங்கள் எடை இழப்புக்கு உதவுகிறது. கீட்டோன்கள் உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகின்றது. இது ஏற்கனவே உள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது. MCT எண்ணெய் உங்கள் செரிமான மண்டலத்தில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது, இது உங்கள் ஒட்டுமொத்த குடலை மேம்படுத்துகிறது. MCT எண்ணெய் உங்களுக்கு குறைந்த பசியை ஏற்படுத்தும்.
MCT எண்ணெய் ஆரோக்கியமான அளவுகளில் பயன்படுத்தப்பட்டால், அது உங்கள் கொழுப்பைக் குறைக்க உதவும். உங்கள் இரத்தத்தில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் இருந்தால், அது இறுதியில் உங்கள் தமனிகளின் சுவர்களில் உருவாகிறது. இதனால் உங்கள் தமனிகள் குறுகி உங்கள் இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை குறைக்கிறது. உங்கள் கொலஸ்ட்ராலை குறைப்பதன் மூலம், உங்கள் தமனிகள் அடைபடுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறீர்கள். இருப்பினும், MCT எண்ணெயை அதிகமாக உட்கொள்வது இதய நோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
ஏற்கனவே கூறியபடி, MCT கள் கீட்டோன்களை உருவாக்கிறது. கீட்டோன்கள் உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுவது மட்டுமல்லாமல், உங்கள் மூளைக்கு எரிபொருளாக மூளை செல்களால் பயன்படுத்தப்படலாம். MCT எண்ணெயை எடுத்துக்கொள்வது உங்கள் மன தெளிவு மற்றும் கவனத்திற்கு குறுகிய கால ஊக்கத்தை அளிக்கும். MCT எண்ணெய் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் அறிகுறிகளை மேம்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
2
0