சப்ஜா விதைகள்: ஒரே வாரத்தில் மலச்சிக்கல் பிரச்சினைக்கு குட்- பை சொல்லி விடலாம்!!!
Author: Hemalatha Ramkumar13 September 2024, 3:31 pm
துளசி விதைகள் என்றும் அழைக்கப்படும் சப்ஜா விதைகள் தனித்துவமான ஃப்ளேவர் மற்றும் உணவுகளை அலங்காரப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு சாதாரண விதை கிடையாது. பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் பண்புகள் நிறைந்த ஒரு அற்புதமான விதை. குறைந்த கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள் மற்றும் புரதங்கள் ஆகியவை அதிக அளவில் உள்ளது. அதுமட்டுமல்லாமல் இதில் நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஏராளமாக உள்ளது.
சப்ஜா விதையில் கால்சியம், மாங்கனீசு, பொட்டாசியம், காப்பர் வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் போன்ற மினரல்களும் உள்ளன. சப்ஜா விதைகளை சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
சப்ஜா விதைகளை நீங்கள் சாப்பிடும் பானங்களில் கலந்து சாப்பிட்டால் கோடைகால வெப்பத்தை நீங்கள் எளிதில் சமாளிக்கலாம். கோடையில் இது அதிக நிவாரணம் அளிக்கிறது. இது உடல் சூட்டை குறைத்து வயிற்றில் ஆற்றும் விளைவை ஏற்படுத்துகிறது. எலுமிச்சை ஜூஸ், இளநீர், தேங்காய் பால், மில்க் ஷேக், ஸ்மூத்தி போன்றவற்றில் சப்ஜா விதைகளை சேர்த்து சாப்பிடலாம்.
டயாபடீஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் தங்களுடைய ரத்த சர்க்கரை அளவை நிலையாக வைத்திருக்க சப்ஜா விதைகளை தங்களது உணவில் தாராளமாக சேர்க்கலாம். ஆன்டி டயாபட்டிக் பண்புகள் சப்ஜா விதைகளில் இருப்பதால் இது ரத்த சர்க்கரை அளவுகளை சீராக்கி, டயாபடீஸ் பிரச்சனையை எளிதில் கையாள உதவுகிறது.
சப்ஜா விதைகளில் கரையும் நார்ச்சத்து இருக்கும் காரணத்தினால் இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மலத்தை மென்மையாக்கி மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
சப்ஜா விதைகள் உடல் எடையை குறைக்க உதவுகிறது. சப்ஜா விதைகளில் புரதச்சத்து மற்றும் கரையும் நார்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. இந்த இரண்டு ஊட்டச்சத்துக்களும் நம்முடைய செரிமான அமைப்பில் நீண்ட நேரத்திற்கு இருக்கும். இதனால் அதிக நேரத்திற்கு நமக்கு பசி எடுக்காது. இதன் காரணமாக நாம் அடிக்கடி தின்பண்டங்கள் சாப்பிடுவதை தவிர்க்கலாம். உடல் எடையை கற்றுக் கொள் வைக்கலாம்.