நீங்கள் வீணாக தூக்கி எறியும் மாதுளம் பழத் தோலின் நினைத்து பார்க்காத நன்மைகள்!!!

Author: Hemalatha Ramkumar
15 November 2022, 9:59 am

மாதுளை பலருக்கு விருப்பமான ஒரு பழமாகும். இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
இருப்பினும், நாம் தூக்கி எறியும் மாதுளை தோல்களிலும் நம்பமுடியாத ஆரோக்கிய நன்மைகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? எனவே, அடுத்த முறை இவற்றைத் தூக்கி எறிவதற்கு முன், இந்த மாதுளைத் தோல்களை உங்கள் முன்னேற்றத்திற்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்று சிந்தியுங்கள். இப்போது மாதுளம் பழ தோலின் பலன்களைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

பற்களுக்கு நல்லது:
மாதுளை பல்வேறு டூத் பவுடர்கள் மற்றும் டூத் பேஸ்டுகளில் மிகவும் அத்தியாவசியமான பொருட்களில் ஒன்றாகும். ஏனென்றால், மாதுளை தோலில் வாய் சுகாதாரத்தை பராமரிக்க உதவும் பல பண்புகள் உள்ளன. மேலும் மாதுளம்பழத்தோலை அரைத்து பொடி செய்து பின் தண்ணீரில் கலந்து குடித்தால், வாய் துர்நாற்றம் வராமல் இருக்க உதவும். மொத்தத்தில், உங்கள் பற்களை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க மாதுளை சிறந்தது.

எலும்புகளை வலுவாக்கும்:
மாதுளம்பழத்தின் தோல் எலும்புகளை வலுப்படுத்தவும், அதன் அடர்த்தியை அதிகரிக்கவும் சிறந்தது. ஏனெனில் இது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. மெனோபாஸ் கட்டத்தில் இருக்கும் பெண்களுக்கு இது முக்கியமாக உதவுகிறது. மாதுளம் பழத்தோலில் இருந்து தயாரிக்கப்படும் கலவையை உட்கொள்வது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது மற்றும் மாதவிடாய் நின்ற உடனேயே ஆஸ்டியோபோரோசிஸ் தொடங்குவதைத் தவிர்க்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

சருமத்திற்கு நல்லது:
ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் காரணமாக பருக்கள் மற்றும் சொறி போன்றவற்றைப் போக்க மாதுளை உதவுகிறது. இது பாக்டீரியா மற்றும் பிற தொற்றுகளை தோலில் இருந்து விலக்கி வைக்க உதவுகிறது. மேலும், மாதுளை உங்கள் சருமத்தை இளமையாகவும் பொலிவாகவும் மாற்ற உதவுகிறது. ஏனெனில் இது வயதான அறிகுறிகளைத் தடுக்கிறது மற்றும் முகத்தில் சுருக்கங்களைத் தவிர்க்கிறது.

தொண்டை புண் குணமாகும்:
மாதுளை தோல் தொண்டை புண் மற்றும் இருமலை குணப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். இதனால் இது பல இருமல் மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. உடனடி நிவாரணம் பெற, இதை ஒரு பொடியாக அரைத்து, இந்த பொடியை தண்ணீரில் கலந்து குடிக்கவும். இது நிச்சயமாக உங்களுக்கு உடனடி நிவாரணத்தை வழங்கும்.

புற்றுநோய்க்கு எதிராக போராடுகிறது:
புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் மாதுளை தோல்கள் பயனுள்ளதாக இருக்கும் என்று ஒரு ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

இதயத்திற்கு நல்லது:
LDL கொழுப்பின் ஆக்சிஜனேற்றம் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. இது இறுதியில் மோசமான இதய நோய்களுக்கு வழிவகுக்கும். மாதுளை தோல்களில் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன. அவை LDL கொழுப்பின் ஆக்சிஜனேற்றத்தைத் தவிர்க்க உதவுகின்றன. இதனால், மாதுளை தோல் இதய நோய்களுக்கு எதிராக போராட உதவுகிறது மற்றும் உங்கள் இதயத்தை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

  • Sivakarthikeyan and Sri Leela in Parasakthi Shooting Spot பராசக்தி ஹீரோ டா… ஸ்ரீ லீலாவுடன் சிவகார்த்திகேயன் செஞ்ச வேலையை பாருங்க : வைரலாகும் வீடியோ!