ஃப்ரென்ச் ஃப்ரைஸ் சாப்பிடுறதுக்கென்னவோ நல்லா தான் இருக்கு… ஆனா கேன்சர் பொறுப்ப யாரு ஏத்துக்குறது…??? 

Author: Hemalatha Ramkumar
3 December 2024, 5:53 pm

ஃப்ரென்ச் ஃப்ரைஸ் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. தினமும் ஃப்ரென்ச் ஃப்ரைஸ் செய்து சாப்பிட்டால் கூட ஆசையோடு சாப்பிடுவதற்கு பலர் இருக்கிறார்கள். ஆனால் இந்த சுவையான ஃப்ரென்ச் ஃப்ரைஸை தினமும் சாப்பிடுவதால் நம்முடைய ஆரோக்கியத்திற்கு எவ்வளவு கேடு ஏற்படுகிறது என்பது பற்றி என்றைக்காவது நீங்கள் யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? ஆம், தினமும் ஃப்ரென்ச் ஃப்ரைஸ் சாப்பிடுவதால் நமது உடலில் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்படலாம். ஆழமாக எண்ணெயில் பொரித்து எடுக்கப்படும் இந்த ஃப்ரென்ச் ஃப்ரைஸில் அதிக அளவு ஆரோக்கியமாற்ற கொழுப்புகளும், கலோரிகளும் இருக்கிறது. இதனால் நம்முடைய உடல் எடை இயற்கையாகவே அதிகரிக்கிறது.

மேலும் உடல் பருமன், டயாபடீஸ், இதய நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட பிரச்சனைகள் ஏற்படுவதற்கான சாத்தியங்களும் உள்ளன. அதுமட்டுமல்லாமல் இந்த பொரிக்கும் செயல்முறையின்பொழுது அக்ரிலமைடு என்ற தீங்கு விளைவுக்கும் காம்பவுண்ட் உற்பத்தி செய்யப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஃப்ரென்ச் ஃப்ரைஸ் அளவுக்கு அதிகமாக சமைக்கும் பொழுது அதனால் நம்முடைய ஆரோக்கியத்திற்கு நீண்ட கால பிரச்சனைகள் ஏற்படலாம். ஆகவே தினமும் ஃப்ரென்ச் ஃப்ரைஸ் சாப்பிடுவதை ஏன் தவிர்க்க வேண்டும் என்பதற்கான சில காரணங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். 

கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது 

ஃப்ரென்ச் ஃப்ரைஸ் பொதுவாக ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட எண்ணெயில் பொரிக்கப்படுவதால் இதில் அதிக அளவு டிரான்ஸ் ஃபேட் காணப்படுகிறது. இது நம்முடைய உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிப்பது மட்டுமல்லாமல் நல்ல கொலஸ்ட்ரால் அளவுகளை குறைத்து விடுகிறது. இதனால் நம்முடைய இதய ஆரோக்கியத்திற்கு மோசமான பிரச்சனைகள் வரலாம்.

செரிமான ஆரோக்கியத்தை பாதிக்கிறது 

அதிக அளவு கொழுப்பு மற்றும் எண்ணெய் பிசுக்கு காரணமாக ஃப்ரென்ச் ஃப்ரைஸ் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் சமநிலையை சீர்குலைத்து அதனால் ஆரோக்கியமற்ற பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகமாகின்றது. இது நம்முடைய செரிமான அமைப்பில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

உடல் எடை அதிகரிக்கலாம்

ஃப்ரென்ச் ஃப்ரைஸில் அதிக அளவு கலோரி இருப்பதன் காரணமாக இதனை தினமும் சாப்பிடுவது நேரடியாக மற்றும் மிக எளிமையாக நம்முடைய உடல் எடையை அதிகரித்து விடும்.

இதையும் படிக்கலாமே: வறண்டு போன உதடுகளுக்கான சொல்யூஷன் உங்க வீட்டு கிட்சன்லயே இருக்கு!!!

இதய நோய் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் 

ஃப்ரென்ச் ஃப்ரைஸ் முழுக்க முழுக்க கொழுப்பு மற்றும் உப்பால் ஆனது. இதனால் இது உயர் ரத்த அழுத்தம், உடற்பருமன் மற்றும் டயாபடீஸ் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக இதய நோய் உண்டாவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

கேன்சர் உண்டாவதற்கான வாய்ப்பு 

ஃப்ரென்ச் ஃப்ரைஸில் உள்ள அதிக கிளைசிமிக் எண் காரணமாக இது ரத்த சர்க்கரையை அளவுகளை உடனடியாக அதிகரிக்கலாம் என்று ஒரு சிலர் கருதுகின்றனர். ஆனால் நாளடைவில் இது ஒரு சில வகையான புற்றுநோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கும். ஏனெனில் பொரிக்கும் செயல்முறையின்பொழுது உருவாக்கப்படும் சில தீங்கு விளைவிக்கும் காம்பவுண்டுகளின் காரணமாக புற்றுநோய்கள் ஏற்படலாம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Tom Holland and Zendaya gets engaged SPIDER MAN ரீல் ஜோடி ரியல் ஜோடியாகிறது.. முடிவுக்கு வந்த 4 வருட டேட்டிங்!
  • Views: - 136

    0

    0