உலக இதய தினம் 2024: குடல் ஆரோக்கியத்துடன் நேரடி தொடர்புடைய இதய ஆரோக்கியம்!!!

Author: Hemalatha Ramkumar
30 செப்டம்பர் 2024, 10:53 காலை
Quick Share

செப்டம்பர் 29 உலக இதய தினம் 2024 ஆக கொண்டாடப்பட்டது. இந்த நாளில் குடல் ஆரோக்கியம் மற்றும் இதய ஆரோக்கியமாகிய இரண்டிற்கும் இடையிலான வலிமையான தொடர்பு குறித்த முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தப்பட்டது. பொதுவாக இதயம் என்று வரும் பொழுது உடற்பயிற்சி மற்றும் உணவில் கவனம் செலுத்துவது வழக்கம். ஆனால் இதய ஆரோக்கியத்தில் குடலுக்கும் முக்கிய பங்கை உள்ளது. அந்த வகையில் ஆரோக்கியமான இதயத்திற்கு ஆரோக்கியமான குடல் எந்த அளவுக்கு முக்கியம் என்பதையும் ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும்.

உடல் ஆரோக்கியம் மற்றும் இதய ஆரோக்கியம் எவ்வாறு ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டுள்ளது?

பொதுவாக “இரண்டாவது மூளை” என்று குறிக்கப்படும் குடலானது நரம்பு, நோய் எதிர்ப்பு அமைப்பு போன்ற உடல் அமைப்புகளில் முக்கிய பங்காற்றுகிறது. உடலில் உள்ள நுண்ணுயிரிகளில் மாற்றம் ஏற்படும் பொழுது அதனால் ட்ரைமெத்திலமைன் N ஆக்சைடு போன்ற தீங்கு விளைவிக்கும் பை ப்ராடக்டுகள் உருவாக்கப்பட்டு அது நேரடியாக இதயம் தொடர்பான நோய்களை ஏற்படுத்துகிறது.

அதாவது குடலில் ஏற்படக்கூடிய சமநிலையின்மையால் கெமிக்கல்கள் உருவாக்கப்பட்டு அது நம்முடைய இதயத்தை பாதிக்கிறது. கூடுதலாக நாம் சாப்பிடும் உணவு மூலமாக உடலில் உள்ள நுண்ணுயிரிகள் பாதிக்கப்பட்டு அதன் விளைவாக இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுகிறது. நார்ச்சத்து, ப்ரீபயாடிக்ஸ் மற்றும் ப்ரோபயாடிக்ஸ் நிறைந்த உணவை சாப்பிடுவது குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். இது நமது இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்தும்.

நல்ல இதய ஆரோக்கியத்திற்கு குடல் ஆரோக்கியத்தை பராமரித்து கொள்வது எப்படி?
நார்ச்சத்து நிறைந்த உணவை சாப்பிடுங்கள்


குடல் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு நார்ச்சத்து முக்கியமான ஒன்றாக அமைகிறது. பூண்டு, வெங்காயம் மற்றும் ஆளி விதைகள் போன்ற ப்ரீபயாடிக்ஸ் குடல் பாக்டீரியாக்களுக்கு போஷாக்கு அளிக்கிறது. இதன் விளைவாக இதயத்திற்கு பலன் கிடைக்கிறது.

ப்ரீபயாடிக் மற்றும் ப்ரோபயாடிக்
உடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு ப்ரீபயாடிக்ஸ் உணவாக அமைகிறது. அதே நேரத்தில் ப்ரோபயாடிக் உங்களுடைய செரிமான அமைப்பில் உயிருள்ள, ஆரோக்கியமான பாக்டீரியாக்களை புகுத்துகிறது. எனவே இவற்றை உங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக ரத்த கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி, வீக்கத்தை குறைத்து ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்கலாம்.

தீங்கு விளைவிக்கும் உணவுகளை தவிர்க்கவும்

அதிக சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட கொழுப்புகள், குறைந்த நார்ச்சத்து போன்ற உணவுகள் குடல் ஆரோக்கியம் குடல் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு மோசமானதாக கருதப்படுகிறது. எனவே உங்களுடைய குடல் நுண்ணுயிரி சமநிலையை சீர்குலைக்கும் எந்த ஒரு உணவையும் சாப்பிடாதீர்கள். இது நேரடியாக இதய நோய்களுடன் தொடர்புடையதாக அமைகிறது.

மன அழுத்தத்தை கட்டுப்படுத்தி எப்போதும் ஆக்டிவாக இருக்கவும் நாள்பட்ட மன அழுத்தம் மற்றும் உட்கார்ந்த வாழ்க்கை முறை உங்களுடைய குடல் மற்றும் இதயத்தை எதிர்மறையாக பாதிக்கலாம். மன அழுத்தம் உங்களுடைய குடல் நுண்ணுயிரிகளின் சமநிலையை பாதித்து அதனால் இதயத்தின் ஆரோக்கியம் மோசமாகிறது. தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுவது மற்றும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கு தியானம் அல்லது யோகா செய்வது உங்களுடைய குடல் மற்றும் இதயம் ஆகிய இரண்டிற்கும் நல்லது.

எனவே உலக இதய தினம் 2024 இல் இதய ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வதற்கு உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம் என்பதை புரிந்து கொண்டிருப்பீர்கள். நாம் சாப்பிடக்கூடிய எந்த ஒரு உணவும் நமது இதய ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Death sentence தாயை கொலை செய்து உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட கொடூர மகன் : அதிரடி தண்டனை!
  • Views: - 82

    0

    0

    மறுமொழி இடவும்