ஆரோக்கியம்

வயிற்றில் சுரக்கும் அமிலம் பற்களை அரிக்குமா… அது எப்படி…???

சற்று அதிகமாக உணவு சாப்பிட்ட பிறகு நெஞ்சுப் பகுதி மற்றும் உணவுக்குழாயில் ஒரு விதமான எரிச்சலை அனுபவித்திருக்கிறீர்களா? இதுவே அமில ரிஃப்லெக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. மிகவும் பொதுவான இந்த செரிமான பிரச்சனையின் போது வயிற்றில் சுரந்த அமிலம் உணவுக் குழாய்க்கு மீண்டும் திரும்பும் போது இது ஏற்படுகிறது. ஆனால் பெரும்பாலான நேரங்களில் இதனை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறோம். ஆனால் இந்த அமில ரிப்ளக்ஸுக்கும் பற்கள் சேதத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பதை நீங்கள் யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?

வயிற்றில் சுரக்கும் அமிலம் உங்களுடைய பற்களை எவ்வாறு சேதப்படுத்தும்? 

நம்முடைய செரிமான அமைப்பு என்பது வாயிலிருந்து ஆரம்பிக்கிறது. வாயில் இருக்கக்கூடிய அதே உட்பூச்சு வயிறு வரை செல்கிறது. வயிற்றில் உள்ள எந்த ஒரு பிரச்சனையும் வாயில் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதே சமயத்தில் வாயின் ஆரோக்கியம் மோசமாக இருந்தால் அது செரிமானத்தை பாதிக்கலாம். எனவே இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டுள்ளன.

அமில ரிஃப்ளெக்ஸ் பொருத்தவரை இது பற்களின் அமைப்பை முழுவதுமாக அரித்து எடுக்கக்கூடிய ஒரு மோசமான விஷயம். இது குறிப்பாக கீழ் பற்களின் உள்பகுதியில் இருந்து ஆரம்பிக்கிறது. இது வாயின் தரையாக கருதப்படுகிறது. இந்த இடத்தில் தான் பெரும்பாலான உமிழ்நீர் இருக்கும். அமில ரிஃப்ளெக்ஸ் ஏற்படும் போது, வாயில் உள்ள உமிழ்நீர் அமிலத்தன்மையாக மாறி அது பற்களை அரிக்கத் தொடங்குகிறது. இதன் விளைவாக பற்களின் எனாமல் முற்றிலுமாக அரிக்கப்பட்டு, பற்கள் உணர்த்திறனாகவும், மஞ்சள் நிறத்திலும் மாறுகிறது. மேலும் நாளடைவில் உங்களுடைய முத்து போன்ற பற்களின் பளபளப்பும் வலிமையும் இழக்க ஆரம்பிக்கிறது.

இதையும் படிக்கலாமே: குளிர்காலத்தில் ஏற்படும் அனைத்து சரும பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு சொல்யூஷன் போதும்!!!

எனவே பற்களை பாதுகாப்பதற்கு அமில ரிஃப்ளெக்ஸ் பிரச்சனையை தடுப்பது எப்படி? 

*உங்களுடைய செரிமான அமைப்பு ஆரோக்கியமாக இருப்பதை உறுதிப்படுத்துங்கள்.

*குடல் மருத்துவரை அவ்வப்போது அணுகுங்கள். 

*ஆரோக்கியமான உணவு சாப்பிட்டு, நிறைய தண்ணீர் பருகவும்.

*டீ மற்றும் காபி போன்றவற்றை குறைவாக சாப்பிடுவது பற்களின் அமைப்பை மேலும் சேதப்படுத்துவதை தடுக்கும். 

*எலுமிச்சை மற்றும் வினிகர் போன்ற அமிலம் நிறைந்த உணவுகளை குறைவாக எடுத்துக் கொள்ளுங்கள். 

*புரோபயாடிக்ஸ் நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடவும். 

*பற்களில் எந்த அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்வதற்கு மருத்துவரை அணுகி, அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள். 

*பற்களை அமில ரிஃப்ளெக்ஸில் இருந்து பாதுகாப்பதற்கு ஓரல் கார்ட் அல்லது நைட் கார்ட் அணிந்து கொள்ளுங்கள்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

’தமிழக மக்களை முட்டாளாக வளர்க்க வேண்டும் என..’ பாஜக ராம சீனிவாசன் பரபரப்பு பேச்சு!

பள்ளிகளில் ஆங்கிலமும் குறைவாக கற்றுக் கொடுக்க வேண்டும் என திமுக கொள்கை வைத்துள்ளதாக பாஜகவின் ராம சீனிவாசன் கூறியுள்ளார். திருச்சி:…

11 minutes ago

பாஜக டூ தனிக்கட்சி.. பிரபல நடிகை திடீர் விலகல்.. காரணம் இதுவா?

பாஜகவின் கலை, கலாசார பிரிவின் மாநிலச் செயலாளராக இருந்த ரஞ்சனா நாச்சியார், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து…

57 minutes ago

ரூம் போட்டு சீமான் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசத் திட்டம்? தபெதிகவினர் மீது போலீசார் ஆக்‌ஷன்!

சென்னையில், சீமானின் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசத் திட்டமிட்டதாக தபெதிகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை: கடந்த…

2 hours ago

2 வருடமாக ராஷி கண்ணாவுடன்… சத்தியத்தை கசிய விட்ட பிரபல நடிகர்..!!

2 வருடமாக நடிகை ராஷி கண்ணாவுடன் பழகி வருவதாகவும், அவர் சத்தியம் செய்து கொடுத்ததை பிரபல நடிகராக ஓபன் கூறியுள்ளார்.…

2 hours ago

அடிமேல் அடியெடுத்து வைக்கும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (பிப்.25) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 20 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 75 ரூபாய்க்கு…

2 hours ago

This website uses cookies.