பாகற்காயை ஒதுக்கி வைக்கும் நபரா நீங்கள்… இத படிச்ச பிறகு வருத்தப்பட போறீங்க!!!
Author: Hemalatha Ramkumar10 April 2023, 4:23 pm
கசப்பாக இருப்பதால் பலரால் ஒதுக்கப்படும் பாகற்காய் உண்மையில் ஏராளமான நன்மைகளை தனக்குள் கொண்டுள்ளது. இந்த பதிவை படித்த பிறகு நிச்சயமாக இனி பாகற்காயை ஒதுக்கி வைக்க மாட்டீர்கள். இப்போது பாகற்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் அவற்றின் மருத்துவ பயன்கள் குறித்து பார்க்கலாம்.
சுமார் 100 கிராம் அளவு உள்ள பாகற்காயில் இரண்டு கிராம் அளவிற்கு நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்தை அதிகரிக்கவும், மலச்சிக்கல் வராமல் தடுக்கவும் உதவுகிறது.
இதில் நான்கு முதல் ஐந்து சதவீதம் வரை இரும்பு சத்து, சிங்க், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன.
கண் பார்வைக்கும் சரும நன்மைக்கும் அதிக அளவு தேவைப்படும் வைட்டமின் ஏ பாகற்காயில் மிக அதிக அளவு உள்ளது. இதன் காரணமாக கண் பார்வை தெளிவாக தெரிவதோடு மட்டுமின்றி நமது சருமத்தில் உள்ள ஒரு சில தோல் நோய்கள் குணப்படுத்தப்படுகிறது.
இதில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ ஆகிய ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியவை ஆகும்.
இன்சுலினை அதிகரிக்கக் கூடிய செரான்டின் பாலிபெப்டின் என்ற சத்து பொருள் இதில் அதிக அளவு உள்ளது. இதன் காரணமாக நமது உடலில் உள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.
இதில் குளோரோஜெனிக் ஆசிட் போன்ற ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் அதிக அளவு உள்ளது. இது ரத்தத்தில் உள்ள கொழுப்பு மற்றும் ட்ரைகிலிசரைடு போன்றவற்றை குறைத்து உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது.
இதில் கால்சியம் சத்து இருக்கிறது. எனவே உடலில் உள்ள எலும்புகள் நன்கு வலுவாகவும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகவும் உதவுகிறது.
நமது குடலில் உள்ள குடல் புழுக்களை அழிக்கவும், குடல் புண்களை சரி செய்யவும் இது மிகவும் உதவியாக இருக்கிறது.
புற்றுநோயை உருவாக்கக்கூடிய செல்களை அழித்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
ரத்தத்தில் உள்ள எல்டிஎல் எனப்படும் கெட்ட கொழுப்புகளை குறைத்து மாரடைப்பு வராமல் தடுக்கிறது.
இவற்றில் உள்ள ஒரு சில என்சைம்கள் சிறுநீரகத்தில் உள்ள கற்களை போக்கவும் பயன்படுகின்றது.
இத்தனை நன்மைகளை கொண்டிருந்தாலும், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதைப் போன்று பாகற்காயை அதிக அளவு தொடர்ந்து பயன்படுத்தும் போது ஒரு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. கர்ப்பிணி பெண்கள் மற்றும் வேறு ஏதேனும் மருந்துகளை உட்கொள்பவர்கள் குறிப்பாக சர்க்கரை நோய் போன்ற நோய்களுக்கு மருந்துகள் உட்கொள்பவர்களுக்கு ரத்தத்தில் எதிர் விளைவுகளை உண்டாக்கி சர்க்கரையின் அளவை மிகவும் குறைத்து விடுகிறது. எனவே இப்படிப்பட்ட மருந்துகளை உட்கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி பாகற்காயை பயன்படுத்துவது உடல் நலத்திற்கு நன்று.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.