தித்திக்கும் மாம்பழத்தின் திகைக்க வைக்கும் மருத்துவ குணங்கள்!!!

Author: Hemalatha Ramkumar
5 April 2023, 10:25 am

மாம்பழம் ஒரு சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட சூப்பர்ஃப்ரூட்.
சத்தான மற்றும் சுவையான மாம்பழம் எக்கச்சக்கமான நன்மைகளை வழங்குகிறது. இத்தகைய சத்தான மாம்பழத்தை பெரியவர்கள் (வயது 19 முதல் 59 வரை) தினமும் உட்கொள்ள வேண்டும் என்று ஒரு ஆய்வு பரிந்துரைக்கிறது. கோடை காலம் ஆரம்பித்து விட்டாலே மாம்பழ சீசனும் வந்துவிடும். ஜூசியான மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் சில ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

*3/4 கப் மாம்பழ துண்டுகளில் 70 கலோரிகள் மட்டுமே உள்ளது. எனவே இது ஒரு திருப்திகரமான இனிப்பு விருந்து என்றே கூறலாம்.

*1 முழு மாம்பழத்தில் 202 கலோரிகள் உள்ளன.

*மாம்பழம் கொழுப்பு இல்லாதது, சோடியம் இல்லாதது மற்றும் கொலஸ்ட்ரால் இல்லாதது.

*மாம்பழத்தில் 20 க்கும் மேற்பட்ட வெவ்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இதன் காரணமாகவே மாம்பழம் ஒரு சூப்பர்ஃபுட்டாக கருதப்படுகிறது.

*3/4 கப் மாம்பழம் உங்கள் தினசரி வைட்டமின் சியில் 50%, தினசரி வைட்டமின் ஏ-யில் 8% மற்றும் தினசரி வைட்டமின் பி6-ல் 8% வழங்குகிறது.

*மாம்பழத்தில் உள்ள இந்த சத்துக்கள் உங்கள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க உதவும்.

*3/4 கப் மாம்பழத்தில் உங்கள் தினசரி நார்ச்சத்து 7% உள்ளது. உங்கள் உணவில் நார்ச்சத்து பெற மாம்பழம் ஒரு சுவையான வழியாகும்.

*3/4 கப் மாம்பழம் ஃபோலேட்டின் நல்ல மூலமாகும். இது உங்கள் தினசரி தேவையில் 15% மற்றும் தாமிரத்தின் தினசரி தேவைகளில் 15% வழங்குகிறது.

*3/4 கப் மாம்பழத்தில் 19 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. இது உங்கள் தினசரி தேவையில் 7% ஆகும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Anthony Thattill and Keerthy Suresh honeymoon in thailand கணவருடன் ஆட்டம் பாட்டம்…சினிமாவுக்கு குட் பை…ஜாலியா ஹனிமூன் சென்ற பிரபல நடிகை…!
  • Views: - 504

    0

    0