புற்றுநோயைத் தடுக்கும் வல்லமை படைத்த வெங்காயத் தாள்!!!
Author: Hemalatha Ramkumar11 April 2023, 7:35 pm
வெங்காயம் பல சுவையான உணவுகளின் பகுதியாக கண்டிப்பாக இருக்கும். சுவையை அதிகரிப்பது மட்டும் அல்லாமல், வெங்காயம் அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் முக்கிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிரம்பியுள்ளது. வெங்காயத்தை தவிர அதன் இலைப்பகுதியான வெங்காய தாளும் உண்ணக்கூடியவை. இது வழக்கமான வெங்காயத்தை விட லேசானது மற்றும் இதனை பச்சையாகவும் சமைக்கலாம். இந்த பதிவில் வெங்காயத் தாளின் சில நன்மைகள் பற்றி பார்ப்போம்.
இதில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆன்டிவைரல் பண்புகள் இருப்பதால், இது வைரஸ் மற்றும் காய்ச்சல் தொற்றுகளுக்கு சிறந்த மருந்தாகும். இது அதிகப்படியான சளியைக் குறைக்கிறது.
இரைப்பை அழற்சி, அமிலத்தன்மை, மலச்சிக்கல் மற்றும் பிற கோளாறுகள் போன்ற தீவிர செரிமான பிரச்சனைகளால் நீங்கள் அவதிப்பட்டால், உங்கள் செரிமான விகிதத்தை அதிகரிக்க நீங்கள் அடிக்கடி வெங்காயத் தாளை உட்கொள்ளலாம்.
வெங்காயத் தாளில் நார்ச்சத்து உள்ளது. இது வீங்கிய குடல்களுக்கு சிகிச்சையளிக்கிறது மற்றும் உங்கள் செரிமான அமைப்பை மிகவும் சுறுசுறுப்பாக ஆக்குகிறது. செரிமான பிரச்சனை உள்ளவர்கள் 20-30 கிராம் வெங்காயத் தாளை ஒரு நாளைக்கு இரண்டு முறை காலை மற்றும் மாலை என இரு வேளை சாப்பிட பலன் கிடைக்கும்.
வெங்காயத் தாளில் அல்லைல் சல்பைடு எனப்படும் சக்திவாய்ந்த சல்பர் கொண்ட கலவைகள் உள்ளன. இது பெருங்குடல் புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. உங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றுவதும், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் உணவுகளை உட்கொள்வதும் புற்றுநோயைத் தடுப்பதற்கு அவசியம்.
லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் போன்ற கரோட்டினாய்டுகளுடன் கூடுதலாக, பச்சை வெங்காயத்தில் வைட்டமின் ஏ உள்ளது. இது சாதாரண பார்வையை பராமரிப்பதிலும் உங்கள் கண்களை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், அவை மாகுலர் சிதைவுக்கு எதிராகப் போராடுகின்றன. மேலும் அவை வீக்கத்திலிருந்து கண்களைப் பாதுகாக்கின்றன.
வைட்டமின் சி மற்றும் ஏ உள்ளதால், வெங்காயத் தாள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கின்றன.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.