உணவுகளை தாளிக்க சேர்க்கப்படும் கறிவேப்பிலையை நம்மில் பலர் ஓரமாக ஒதுக்கி வைத்துவிடுவோம். கறிவேப்பிலைகள் ஒரு தனித்துவமான கசப்பு மற்றும் காரமான சுவை மற்றும் அமிலத்தன்மை கொண்டவை. இந்த இலைகள் உணவுகளில் அவற்றின் நறுமணச் சுவைக்காக மட்டுமின்றி, உணவின் ஆரோக்கிய நன்மைகளையும் மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது.
ஆயுர்வேதம், சித்தா, யுனானி போன்ற பல மருத்துவ முறைகளில் கறிவேப்பிலையானது நீரிழிவு, வயிற்றுப்போக்கு, இரைப்பை குடல் கோளாறுகள் போன்றவற்றை குணமாக்க பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய நன்மை வாய்ந்த கறிவேப்பிலை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
கறிவேப்பிலை நார்ச்சத்துக்கான சிறந்த மூலமாகும். இது நமது செரிமான ஆரோக்கியத்தையும் சீரான குடல் இயக்கத்தையும் மேம்படுத்துகிறது. இது வயிற்றுப்போக்கு மற்றும் குமட்டலுக்கு சிகிச்சையளிப்பதில் உதவியாக இருக்கும், மேலும் உடலில் உள்ள இரத்த குளுக்கோஸ் அளவையும் கட்டுப்படுத்துகிறது.
கறிவேப்பிலையில் அதிக புரதச்சத்து உள்ளது. இது உடலின் சரியான வளர்ச்சிக்கு முக்கியமானது மற்றும் நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.
கால்சியத்தின் ஆதாரமாக இருப்பதால், கறிவேப்பிலை பற்கள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்தவும், ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் ஆஸ்டியோமலாசியா போன்ற நோய்களைத் தடுக்கவும் பயனுள்ளதாக இருக்கும்.
கறிவேப்பிலையில் உள்ள முக்கிய ஊட்டச்சத்துக்களில் ஒன்றான பாஸ்பரஸ் சிறுநீரகத்தை சுத்தப்படுத்த உதவுகிறது. இது சாதாரண இதயத் துடிப்பை பராமரிக்கிறது. உடற்பயிற்சியின் பின்னர் வலிமிகுந்த தசைப்பிடிப்பைக் குறைக்கிறது மற்றும் பற்கள் மற்றும் எலும்புகளை பலப்படுத்துகிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.