ஃபிரிட்ஜ் தண்ணீர் குடிக்கிறதால என்னென்ன பிரச்சினை வருது பாருங்க!!!

Author: Hemalatha Ramkumar
30 April 2023, 3:14 pm

கடுமையான வெயிலில் வெளியே சென்று விட்டு வீடு திரும்பியவுடன், ஃபிரிட்ஜ் தண்ணீர் குடித்தால் தான் ஒரு சிலருக்கு திருப்தியாகவே இருக்கும். வெளியில் சென்று விட்டு வரும்பொழுது, பிரிட்ஜில் வைக்கப்பட்ட தண்ணீரை குடிப்பது உங்களுக்கு ஆதரவளிப்பதாக இருந்தாலும், இது பலவிதமான பக்கவிளைவுகளுடன் வருகிறது.

ஃபிரிட்ஜ் தண்ணீர் செரிமானத்தை பாதிப்பது மட்டுமல்லாமல் சைனஸ் போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். ஒரு வேலை உங்களுக்கு குளுமையான தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால், நீங்கள் இயற்கையான முறையில் உருவாக்கப்படும் மண் பானையில் சேமிக்கப்பட்ட தண்ணீரை பருகலாம். மண்பானை தண்ணீரை குடிப்பதால் ஏராளமான நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. இப்போது இந்த பதிவில் பிரிட்ஜில் வைக்கப்பட்ட தண்ணீர் க்ஷ குடிப்பதால் ஏற்படும் சில பக்க விளைவுகள் குறித்து பார்க்கலாம்.

பிரிட்ஜ் தண்ணீர் செரிமானத்தை கடுமையாக பாதிக்கிறது. நீங்கள் வழக்கமான முறையில் பிரிட்ஜ் தண்ணீரை குடித்து வந்தால் உங்கள் உணவுகள் ஜீரணமாவதில் சிக்கல் ஏற்படும். இதன் காரணமாக உங்களுக்கு அடிவயிற்றில் வலி, குமட்டல், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.ஃபிரிட்ஜ் தண்ணீரின் வெப்பநிலையுடன் நமது உடல் வெப்பநிலை ஒத்துப்போகாததன் காரணமாகவே செரிமானத்தில் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

அதிகப்படியான ஃபிரிட்ஜ் தண்ணீர் குடிப்பதால் பிரைன் ஃப்ரீஸ் என்று சொல்லப்படும் மூளை உறைதல் பிரச்சனை ஏற்படுகிறது. இது அதிகப்படியான ஐஸ் வாட்டர் அல்லது ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் ஏற்படும் மோசமான விளைவு ஆகும். இந்த நிலையை பொறுத்தவரை ஐஸ் வாட்டரானது முதுகுத்தண்டில் காணப்படும் உணர்வு நரம்புகளை குளுமையடைய செய்கிறது. இது நேரடியாக மூளையை பாதிக்கிறது. இதன் காரணமாக தலைவலி, சைனஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

நமது உடலில் காணப்படும் வேகஸ் என்ற நரம்பானது இதயம், நுரையீரல், செரிமான அமைப்பு போன்றவற்றை நமது கழுத்து மூலமாக கட்டுப்படுத்துகிறது. அதிகப்படியான பிரிட்ஜ் தண்ணீரை குடிக்கும் பொழுது இந்த நரம்பு குளுமையடைகிறது. இதனால் இதயத்துடிப்பு மற்றும் நாடித் துடிப்பு குறைகிறது. இது அவசரகால சூழ்நிலைக்கு உங்களை தள்ளலாம்.

ஃபிரிட்ஜ் தண்ணீரானது உடம்பில் சேகரிக்கப்பட்ட கொழுப்புகளை கடினமாக்குகிறது. இது அந்த கொழுப்பை எரிப்பதில் சிக்கலை ஏற்படுத்துகிறது. ஆகவே உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு உண்டாகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!