நெல்லிக்காய் சாப்பிடுவதால் பக்க விளைவுகள் கூட ஏற்படுமா…???

Author: Hemalatha Ramkumar
12 December 2024, 12:18 pm

சருமம், தலைமுடி ஒட்டுமொத்த ஆரோக்கியம் எதுவாக இருந்தாலும் நெல்லிக்காய் பல நன்மைகளை வழங்கக்கூடிய ஒரு பொக்கிஷமாக இருக்கிறது. இதில் நமது ஆரோக்கியத்திற்கு தேவையான அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் உள்ளது. இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேதம் பல உடல்நல பிரச்சனைகளுக்கு நெல்லிக்காயை ஒரு தீர்வாக பரிந்துரை செய்கிறது. எனினும் நெல்லிக்காயை அதிகளவு சாப்பிடுவதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். இதில் நீர்ச்சத்து இழப்பு, சரும பிரச்சனைகள் போன்றவை அடங்கும். நெல்லிக்காய் ஒரு சூப்பர்ஃபுட்டாக கருதப்பட்டாலும் இதனை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது அல்லது ஒரு சில பிரச்சினைகளை கொண்டவர்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சாப்பிடுவது கேடு விளைவிக்கலாம். ஆகவே இந்த பதிவில் நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

குறைந்த இரத்த அழுத்தம் கொண்டவர்கள் 

உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் திறன்கள் நெல்லிக்காயில் உள்ளது. இதனால் ரத்த அழுத்தத்தை பராமரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஒருவேளை நீங்கள் குறைவான இரத்த அழுத்த பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால் அதிக அளவு நெல்லிக்காய் சாப்பிடுவது உங்களுடைய இரத்த அழுத்தத்தை இன்னும் மோசமான நிலைக்கு குறைத்து விடும். இது உங்கள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம்.

குறைவான சர்க்கரை கொண்டவர்கள் 

டயபாடீஸ் பிரச்சனையை கட்டுப்படுத்துவதற்கு உதவும் பண்புகள் நெல்லிக்காயில் காணப்படுகிறது. இதில் உள்ள அதிக நார்ச்சத்து பண்புகள் அதிகப்படியான சர்க்கரையை உறிஞ்சுகிறது. ஆனால் நீங்கள் குறைவான சர்க்கரை அதாவது ஹைபோகிளைசிமியா கொண்டிருந்தாலோ அல்லது டயாபடீஸ்க்காக மருந்து எடுத்து வந்தாலோ உங்களுக்கு நெல்லிக்காய் சாப்பிடுவது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

இதய நோயாளிகள் 

ஒரு சில மருந்துகளுடன் இணையும் போது நெல்லிக்காய் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே இதய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நெல்லிக்காய் சாப்பிடுவதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.

அசிடிட்டி 

நெல்லிக்காய் வைட்டமின் C மற்றும் அஸ்கார்பிக் அமிலத்தின் சிறந்த மூலமாக அமைகிறது. இயற்கையாகவே அமிலத்தன்மை நிறைந்த நெல்லிக்காய் அசிடிட்டி பிரச்சனையை தூண்டி, வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. எனவே நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஒரு சிலருக்கு நெஞ்செரிச்சல் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

இதையும் படிச்சு பாருங்க: எவ்வளோ சாப்பிட்டாலும் ஸ்லிம்மா இருக்க பெண்களின் இரகசியமான பழக்க வழக்கங்கள் என்னனு தெரிஞ்சுக்கலாம்!!!

மலச்சிக்கல்

நெல்லிக்காய் மலச்சிக்கல் பிரச்சனைக்கு ஒரு சிறந்த தீர்வு என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது மலத்தை கடினமாக்கி, அது வெளியேறுவதில் பிரச்சனையை ஏற்படுத்தும். நெல்லிக்காயில் அதிக அளவு தானியங்கள் காணப்படுகிறது. இது குடலில் வறண்ட விளைவு ஏற்படுத்தி மலச்சிக்கலை உண்டாக்கும். எனவே நெல்லிக்காயை அதிக அளவிலோ அல்லது வெறும் வயிற்றிலோ சாப்பிடக்கூடாது.

சரும பிரச்சினை

நெல்லிக்காய் ஒரு சிறந்த நச்சு நீக்கியாக செயல்படுகிறது. இது உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்களில் இருந்து விடுபடுவதற்கு உதவுகிறது. இந்த நீர்ச்சத்து இழப்பை ஈடுக்கட்டாவிட்டால் அதனால் சருமத்தில் வறட்சி மற்றும் முன்கூட்டிய வயதான அறிகுறிகள் ஏற்படலாம். இது நெல்லிக்காயின் மிகப்பெரிய பக்க விளைவாக கருதப்படுகிறது.

தலைமுடி உதிர்வு

அளவுக்கு அதிகமாக நெல்லிக்காய் சாப்பிடுவது மயிர் கால்கள் வறட்சி, தலைமுடி உதிர்வு, அரிப்பு, பொடுகு மற்றும் பிற மயிர் கால்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். நெல்லிக்காய் மயிர்க்கால்கள் மற்றும் தலைமுடியை வறண்டு போக செய்து அதனால் தலைமுடி உடைவது மற்றும் தலைமுடி உதிர்வு போன்றவற்றை ஏற்படுத்துகிறது.

நெல்லிக்காயை பாதுகாப்பாக சாப்பிடுவது எப்படி?

நெல்லிக்காயை  பாதுகாப்பாக சாப்பிடுவதற்கான வழி அதனை அளவோடு சாப்பிடுவது தான். ஒரு 1 அல்லது 2 நெல்லிக்காய் சாப்பிடுவது போதுமானதாக கருதப்படுகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • வாடி வாசலில் களமிறங்கிய இளம் நடிகை…லேட்டஸ்ட் தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்..!