காரமான உணவுகளை சாப்பிட உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா… அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி தெரிஞ்சுக்கோங்க!!!
Author: Hemalatha Ramkumar2 October 2022, 10:20 am
காரமான உணவுகள் நம் உடலில் பல நன்மை பயக்கும் என்பதைப் பற்றி நிறைய கூறப்பட்டுள்ளது. ஆனால் காரமான உணவுகளை சாப்பிடுவது உங்கள் வயிற்று புண்கள் மற்றும் இரைப்பை அழற்சியை மோசமாக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
காரமான உணவுகள் புண்கள் அல்லது ரிஃப்ளக்ஸ் ஏற்படுத்தாது. ஆனால் இது ஏற்கனவே இத்தகைய நிலைமைகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அறிகுறிகளின் தீவிரத்தை அதிகரிக்கும். கூடுதலாக, காரமான உணவுகள் குடலை எரிச்சலூட்டுவதன் மூலம் சில நோயாளிகளுக்கு வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். இது சுவை மொட்டுகளின் உணர்திறனையும் குறைக்கிறது. எனவே உங்களுக்கு பிடித்த காரமான உணவுகளை அதிகமாக சாப்பிடுபவராக இருந்தால் அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது. இப்போது காரமான உணவுகளை உண்பதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பார்க்கலாம்.
●நெஞ்செரிச்சல்:
மசாலாப் பொருட்கள் அமிலங்களின் கலவையாகும். இவை வயிற்றின் சுவர்களை சேதப்படுத்தத் தொடங்குகிறது.
●இரைப்பை புண்
அதிக காரமான உணவுகளை சாப்பிடுவது, உணர்திறன் வாய்ந்த சளி சவ்வு அல்லது சிறுகுடலில் புண்களை மோசமாக்கும். இந்த புண்கள் மிகவும் வேதனையானவை. மேலும் வயிற்று வலி, குமட்டல், வாந்தி மற்றும் எடை இழப்பை ஏற்படுத்துகின்றன.
●பசியின்மை
மிதமான அளவு காரமான உணவுகளை உட்கொள்வது பரவாயில்லை. உதாரணமாக நீங்கள் வாரத்திற்கு 2-3 முறை சாப்பிடலாம். ஆனால் கண்டிப்பாக தினமும் சாப்பிடக்கூடாது. நீங்கள் காரமான உணவுகளை அதிகமாக சாப்பிட்டால், பசியின்மை ஏற்படலாம்.
●கடுமையான இரைப்பை அழற்சி
கடுமையான இரைப்பை அழற்சியானது வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு, காய்ச்சல், தலைவலி மற்றும் மலம் மற்றும் வாந்தியில் இரத்தம் போன்ற அறிகுறிகளைக் கொண்டிருக்கலாம்.
இரைப்பை அழற்சியானது இரைப்பை சளிச்சுரப்பியின் வீக்கத்தால் ஏற்படுகிறது. எனவே, உங்கள் வயிற்றுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்க காரமான உணவுகளை உட்கொள்வதை முடிந்தவரை குறைக்கவும்.
0
0