கற்றாழை இயற்கை பொருளா இருந்தாலும் அதனாலையும் பக்க விளைவுகள் வரலாம்… என்னன்னு தெரிஞ்சுக்கலாம்!!! 

Author: Hemalatha Ramkumar
4 January 2025, 11:04 am

கற்றாழை என்பது இயற்கையான மற்றும் எந்த ஒரு தீங்கு விளைவிக்காத பொருளாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால் இதனை நேரடியாக முகத்திற்கு தடவும் பொழுது ஒரு சில பக்க விளைவுகள் ஏற்படலாம். ஏனெனில் ஒரு சில இயற்கையான பொருட்கள் அதாவது தேயிலை மர எண்ணெய் மற்றும் கற்றாழை போன்றவற்றை பச்சையாக அல்லது வேறு எந்த ஒரு பொருளோடும் கலந்து பயன்படுத்தாமல் இருக்கும் போது அதனால் சருமத்திற்கு சில பிரச்சனைகள் வரலாம். அதுமட்டுமல்லாமல் தனிப்பட்ட சரும வகைகள் மற்றும் உணர்திறன் தன்மைகள் வேறுபடலாம் என்பதால் ஒரு சில நபர்களுக்கு கற்றாழையை பச்சையாக பயன்படுத்தும் பொழுது அரிப்பு, தடிப்பு மற்றும் அலர்ஜி விளைவுகள் உண்டாகும்.

ஆழமான வெட்டுகள் அல்லது காயங்களில் கற்றாழை சாற்றை பயன்படுத்துவது அதன் இயற்கையான ஆற்றும் தன்மையை குறைக்கும் என்று சொல்லப்படுகிறது. தொற்று நிறைந்த சருமத்தில் ஃபிரெஷான கற்றாழை ஜெல்லை பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் இது தொற்றுகளை இன்னும் தீவிரமாக்கலாம். ஆகவே கற்றாழை சாற்றை நேரடியாக முகத்தில் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

அலர்ஜி 

ஃபிரெஷான கற்றாழை சாறு ஒரு சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். இதனால் சிவத்தல், அரிப்பு மற்றும் சரும தடிப்பு ஏற்படலாம். இந்த மாதிரியான அறிகுறிகளை உங்களுடைய சருமம் வெளிப்படுத்தும் பொழுது உடனடியாக கற்றாழை பயன்படுத்துவதை நிறுத்தி விடுங்கள். மேலும் மருத்துவ ஆலோசனையை பெறுவது அவசியம்.

சரும எரிச்சல் 

கற்றாழையை பயன்படுத்திய உடனேயே உங்களுடைய சருமத்தின் உணர்திறன் தன்மை அதிகரிப்பதையோ அல்லது எரிச்சலையோ அனுபவித்தால் அது உங்கள் தோலுக்கு உகந்தது அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வறட்சி 

நீண்ட நேரத்திற்கு ஃபிரஷ்ஷான கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி இருந்தால் அதனால் தோல் வறண்டு போகலாம்.

இதையும் படிக்கலாமே: எல்லா குழம்பு வகைக்கும் செட் ஆகுற மாதிரி சூப்பரான வாழைக்காய் சுக்கா!!!

எரியும் உணர்வு

வறண்ட அல்லது சென்சிடிவான தோலில் ஃபிரெஷான கற்றாழை சாற்றை பயன்படுத்துவது தற்காலிகமாக எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும்.

எனவே எப்பொழுதும் கற்றாழை சாற்றை அப்படியே பயன்படுத்துவதை விட அதனை வேறு சில பொருட்களோடு சேர்த்து பயன்படுத்துவது நல்லது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Bigg Boss Anshitha interview இறுதிக்கட்டத்தை நோக்கி பிக்பாஸ்…இவர் தாங்க டைட்டில் வின்னர்…போட்டுடைத்த அன்ஷிதா..!
  • Views: - 67

    0

    0

    Leave a Reply