காபி குடிப்பதற்கான சரியான நேரம் எது…???

Author: Hemalatha Ramkumar
2 December 2024, 11:07 am

நம்மில் பெரும்பாலானவர்கள் நிச்சயமாக படுக்கையில் இருந்து எழுந்திருக்க ஒரு கப் காபியையே நம்பி இருக்கிறோம். இது நம்மை விழிப்போடு வைத்திருக்கவும், அன்றைய நாளை புத்துணர்ச்சியோடு சமாளிக்கவும் உதவுவதாக நாம் நம்புகிறோம். ஆனால் காபியை எந்த நேரத்தில் சாப்பிடுவது சிறந்தது என்பது போன்ற கேள்வி இந்த இடத்தில் எழுகிறது. நீங்கள் நம்பினாலும் சரி நம்பாவிட்டாலும் சரி உங்களுடைய படுக்கையில் இருந்து எழுந்த உடனேயே முதல் கப் காபி குடிப்பது தவறானது. 

நம்முடைய உடல்கள் அனைத்தும் சர்க்காடியன் கடிகாரம் என்ற ஒரு இயற்கை ரிதத்தை பின்பற்றுகிறது. இந்த உட்புற கடிகாரம் நம்மை விழிப்புணர்வோடு வைத்திருக்க உதவும் கார்ட்டிசால் என்ற ஹார்மோனை கட்டுப்படுத்துகிறது. கார்ட்டிசால் அளவுகள் நாம் எழுந்திருக்கும் பொழுது அதிக அளவில் இருக்கும். வழக்கமாக காலை 6 மணி முதல் 10 மணி வரை அதிலும் காலை 8 முதல் 9 மணி சமயத்தில் அளவுக்கு அதிகமாகவே இருக்கும். இந்த சமயத்தில் நீங்கள் ஒரு கப் காபி குடிக்கும் பொழுது உங்களுக்கு முழு ஆற்றல் கிடைக்காமல் போகலாம். எனவே காபி குடிப்பதற்கான சரியான நேரம் என்பது காலை 9:30 மணி முதல் 11:30 மணி ஆகும். இந்த நேரமானது நம்முடைய உடலின் கார்ட்டிசால் அளவுகள் இயற்கையாக குறைந்து போகும் நேரத்தோடு ஒத்துப் போகிறது. 

அதாவது இது காலை மற்றும் மதியத்திற்கு இடைப்பட்ட நேரத்தில் குறைய ஆரம்பிக்கிறது. காபியில் காணப்படும் காஃபைனுக்கு நம்முடைய உடல் பழகி விட்டால் அதனால் எந்த ஒரு பாசிட்டிவான விளைவும் ஏற்படாது. எனவே உங்களுடைய காபியை பருகுவதற்கு நீங்கள் சரியான நேரத்தை கடைபிடிப்பது அவசியம். உங்களுடைய இயற்கை இயற்கையான கார்ட்டிசால் ரிதத்துடன் ஒத்துப் போகும் வகையில் காபி குடிப்பதை உறுதிப்படுத்துங்கள். கார்ட்டிசால் அளவுகள் அதிகமாக இருக்கும் பொழுது காபி குடிக்க வேண்டாம். 

ஒரு நாளின் கடைசி கப் காபியை எப்பொழுது குடிக்கலாம்? 

காபியில் உள்ள காஃபைன் நம்முடைய உடலில் 5 முதல் 6 மணி நேரம் வரை அதன் விளைவுகளை கொண்டிருக்கும். ஒருவேளை நீங்கள் உணர்திறன் கொண்டவராக இருந்தாலோ அல்லது தூங்குவதில் உங்களுக்கு சிக்கல் ஏற்பட்டாலோ நீங்கள் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எனவே தூங்குவதற்கு முன்பு காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் வெறும் வயிற்றில் காபி குடிக்க வேண்டாம். ஒரு நாளின் கடைசி காபி குடிப்பதற்கான சரியான நேரம் மதியம் 2 முதல் 3 மணி ஆகும். அதிலும் காபி வயதானவர்களின் மெட்டபாலிசத்தை குறைக்கலாம் என்பதால் அவர்கள் மதியத்தோடு காபி குடிப்பதை நிறுத்திக் கொள்வது இன்னும் நல்லது. 

இதையும் படிக்கலாமே: முட்டை புலாவ் இந்த மாதிரி செய்தா இனி தினமும் இது தான் வேண்டும்னு வீட்ல எல்லாரும் அடம்பிடிக்க போறாங்க!!!

எனவே காபி என்பது ஹீரோவா அல்லது வில்லனா? 

எப்பொழுதுமே காபி என்ற உடனே அது நம்முடைய உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற பொதுவான கருத்து உள்ளது. ஆனால் உண்மை அப்படி கிடையாது. காபி குடிப்பதால் ஒரு சில நன்மைகளும் நமக்கு கிடைக்கும். ஆனால் அதனை நாம் சரியான நேரத்தில் கொடுப்பது அவசியம். காலை மற்றும் மதிய வேலைக்கு இடைப்பட்ட நேரத்தில் காபி குடிப்பது நம்முடைய அறிவுத்திறன் செயல்பாடு மற்றும் மனநிலையை மேம்படுத்தும். 

வொர்க் அவுட் செய்வதற்கு முன்பு காபி குடிப்பது உடற்பயிற்சியில் சிறந்த செயல் திறனை வெளிப்படுத்த உதவும். கொழுப்பு கல்லீரல் நோயினால் அவதிப்படுபவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 3 கப் பிளாக் காபி சர்க்கரை இல்லாமல் குடித்த வர பலன் கிடைக்கும். உணவுக்கு பிறகு அல்லது உணவின் போது காபி குடிப்பது செரிமானம் மற்றும் மெட்டபாலிசத்தை தூண்டி ஊட்டச்சத்து சிறந்த முறையில் உறிஞ்சுவதற்கு உதவும். 

யாரெல்லாம் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்? 

*உங்களுக்கு அடிக்கடி பதட்டம் ஏற்படும் என்றால் காபி குடிப்பதை தவிர்த்து விடுங்கள். 

*கர்ப்பிணி பெண்கள் காபி குடிக்க பரிந்துரை செய்யப்படவில்லை. 

*இதய பிரச்சினைகள் அல்லது அதிக ரத்த அழுத்தம் இருப்பவர்கள் காஃபைன் கலந்த பானங்களை தவிர்க்க வேண்டும். 

*தூங்குவதில் சிக்கல் இருப்பவர்களும் காபி குடிக்க வேண்டாம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!