பலருக்கு கத்திரிக்காய் பிடிக்காது என்றாலும் கூட, இந்த காய்கறி ஒரு சிலருக்கு ஃபேவரெட்டான காய்கறியாக இருக்கும். இந்த ஊதா நிற காய்கறி அற்புதமான சுவையை கொண்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, பெரும்பாலான குழம்பு வகைகளில் கத்திரிக்காய் சேர்க்கப்படுகிறது. அதோடு கத்திரிக்காய் வறுவல், கத்தரிக்காய் கொத்சு, கத்திரிக்காய் பஜ்ஜி போன்ற பல உணவுகள் கத்திரிக்காய் கொண்டு சமைக்கப்படுகின்றன. கத்திரிக்காயில் எக்கச்சக்கமான ஆரோக்கிய நன்மைகள் காணப்படுகிறது. இதில் ஏராளமான நன்மைகள் இருந்தாலும், ஒரு சில நபர்கள் கத்திரிக்காயை தவிர்ப்பது நல்லது. அது ஏன் என்பதையும், யாரெல்லாம் கத்திரிக்காயை தவிர்க்க வேண்டும் என்பதையும் இந்த பதிவில் பார்க்கலாம்.
பலவீனமான செரிமான அமைப்பு கொண்டவர்கள் கத்திரிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அது வாயு பிரச்சனையை ஏற்படுத்தும்.
உங்களுக்கு எந்தவிதமான அலர்ஜி இருந்தாலும் நீங்கள் கத்திரிக்காயை கட்டாயமாக சாப்பிடக் கூடாது. ஏனெனில் கத்திரிக்காய் அந்த அலர்ஜியை அதிகமாக்கிவிடும்.
நீங்கள் மனச்சோர்வுக்காக மருந்து எடுத்துக் கொண்டு இருந்தாலும் அல்லது மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், கத்திரிக்காயை தவிர்க்கவும். ஏனெனில் கத்திரிக்காய் மனச்சோர்வை அதிகரித்து விடும். மேலும் அதற்காக எடுத்துக் கொள்ளப்படும் மருந்துகளின் விளைவுகளை குறைக்கும்.
ரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள் கத்திரிக்காயை முழுவதுமாக ஒதுக்கி விட வேண்டும். ஏனெனில் ரத்த அளவை அதிகரிக்க கத்திரிக்காய் ஒரு தடையாக செயல்படுகிறது.
உங்களுக்கு கண் தொடர்பாக ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலும், கண்களில் எரிச்சல், வீக்கம் போன்றவை இருந்தாலும் கத்திரிக்காயை சாப்பிட வேண்டாம்.
உங்களுக்கு பைல்ஸ் பிரச்சனை இருந்தால் கட்டாயமாக கத்திரிக்காயை சாப்பிடாதீர்கள். ஏனெனில் இது பைல்ஸ் பிரச்சனையை அதிகரிக்க கூடும்
சிறுநீரக கற்கள் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கட்டாயமாக கத்திரிக்காயை சாப்பிடக்கூடாது. கத்திரிக்காயில் காணப்படும் ஆக்ஸலேட் என்ற கலவை சிறுநீரக கற்களை அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…
சென்னையில், இன்று (மார்ச் 10) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 50…
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம்…
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். துபாய்: 9வது ஐசிசி…
This website uses cookies.