இரண்டே நிமிடத்தில் உங்களை சுறுசுறுப்பாக மாற்றும் துளசி டீ!!!

Author: Hemalatha Ramkumar
3 February 2022, 9:51 am

ஒரு கப் தேநீர் பலரது சிறந்த நண்பர் என்றே சொல்லலாம். அது மட்டும் இல்லாமல் இந்த பானம் சமூகங்கள் முழுவதும் உள்ள மக்களை இணைக்கிறது. மேலும் குளிர்ந்த குளிர்கால மாதங்களில் சூடாக பருகப்படுகிறது. துளசி இலைகளின் நன்மையால் செறிவூட்டப்பட்ட இந்த டீ நீண்ட, சோர்வான நாளுக்குப் பிறகு உங்களை ஆற்றுப்படுத்தும். ஆரோக்கியமான இந்த டீயை எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
15-20 – துளசி இலைகள்
1 அங்குலம் – இஞ்சி
5-6 – கருப்பு மிளகு
2 – கிராம்பு
2 – பச்சை ஏலக்காய்
1 டீஸ்பூன் – தேயிலை இலைகள்
3 கப் – பால்
¼ கப் – நறுக்கிய வெல்லம்

செய்முறை:
*இஞ்சியை ஒரு உரலின் உதவியுடன் கரடுமுரடாக அரைக்கவும். கருப்பு மிளகு, கிராம்பு மற்றும் பச்சை ஏலக்காய் சேர்த்து மீண்டும் ஒரு கரடுமுரடான கலவையாக அரைக்கவும்.

* அடி கனமான பாத்திரத்தில் 1 கப் தண்ணீரை சூடாக்கவும். அரைத்த கலவையைச் சேர்த்து நன்கு கலக்கவும். டீத்தூள் சேர்த்துக் கலந்து கொதிக்க விடவும்.

*துளசியை சேர்த்து நன்றாக கலக்கவும். 2-3 நிமிடங்கள் இது கொதிக்கட்டும்.

*பாலைக் கிளறி, கொதி வரும் வரை காத்திருக்கவும். தொடர்ந்து 3-4 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

* தீயை மிதமாக குறைத்து வெல்லம் சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு கொதி வரும் வரை அல்லது வெல்லம் உருகும் வரை இது கொதிக்க வேண்டும்.

*அடுப்பை அணைத்து, தேநீரை தனித்தனியாக டம்ளர்களில் வடிகட்டவும்.

* பிஸ்கெட்டுடன் சூடாகப் பரிமாறவும்.

  • Shine Tom Chacko jumps out of hotel window to escape from police during drug raid போலீஸ் ரெய்டுக்கு பயந்து 5 ஸ்டார் ஹோட்டலில் இருந்து எகிறி குதித்து தப்பியோடிய நடிகர் : அதிர்ச்சி வீடியோ!