கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் ஒவ்வொரு வருடமும் நீரழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அபாரமாக அதிகரித்து வருகிறது. வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உணவில் காட்டப்படும் அலட்சியமே இந்த மாதிரியான நிலைக்கு காரணம். இன்னும் சொல்லப்போனால், இந்தியா நீரழிவு நோயின் தலைநகரம் என்று சொல்லப்படும் அளவுக்கு பலர் இன்று இந்தியாவில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் அந்த வகையில் சிப்ஸ், குக்கீஸ், கேக், பொரிக்கப்பட்ட உணவுகள் மற்றும் மயோனைஸ் போன்றவற்றை சாப்பிடுவதால் தான் நீரழிவு நோய் அதிகமாகிறது என்று மெட்ராஸ் டயாபடீஸ் ரிசர்ச் ஃபவுண்டேஷன் மற்றும் ICMR நடத்திய ஒரு மருத்துவ சோதனை மூலமாக தெரிய வந்துள்ளது.
அல்ட்ரா ப்ராசஸ் செய்யப்பட்ட உணவின் காரணமாகவே உலக அளவில் இந்தியா நீரழிவு நோயின் தலைநகரமாக மாறி வருவதாக அந்த ஆய்வில் சொல்லப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் 38 நபர்கள் பங்கு கொண்டனர். சிப்ஸ், குக்கீஸ், கேக், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள் மற்றும் மயோனைஸ் போன்றவை முழுக்க முழுக்க அட்வான்ஸ்டு கிலைகேஷன் எண்டு ப்ராடக்டுகள் (AGE). இவை நேரடியாக நம்முடைய கணையத்தை பாதிக்கிறது.
நீரிழிவு நோயின் தலைநகரமாக மாறிவரும் இந்தியா
38 உடற்பருமன் கொண்ட நபர்கள் இந்த ஆய்வில் பங்கேற்று கொண்டனர். இதில் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு தனி குழுவாக வைக்கப்பட்டார்கள். இந்த குழுவில் ஒரு குழுவுக்கு 12 வாரங்களுக்கு குறைந்த AGE உணவு கொடுக்கப்பட்டது. மேலும் மற்றொரு குழுவிற்கு அதிக AGE உணவு கொடுக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது குறைந்த மற்றும் அதிக AGE உணவு காரணமாக குளுக்கோஸ் மற்றும் லிப்பிட் மெட்டபாலிசத்தில் ஏற்பட்ட விளைவு மற்றும் அதனால் ஏற்பட்ட ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் மற்றும் வீக்கம் ஆகியவை கண்காணிக்கப்பட்டது.
இதையும் படிக்கலாமே: உங்க வீட்டு சமையலறையில் இந்த பொருட்கள் இருக்க வரைக்கும் புளித்த ஏப்பம் பற்றி கவலையேபட வேண்டாம்!!!
இந்த ஆய்வில் பங்கு கொண்ட மருத்துவர்கள் கூறியபடி, கடந்த சில வருடங்களாக இந்தியாவில் உணவு சார்ந்த பழக்கங்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதில் கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள், உப்பு, சர்க்கரை மற்றும் விலங்கு மூலமாக கிடைக்கும் பொருட்கள் அதிக அளவு சாப்பிடப்பட்டு வருகிறது. மறுபுறம் உடற்பயிற்சி செய்யாதது மற்றும் மோசமான வாழ்க்கை முறை ஆகியவையும் டயாபடீஸ் ஏற்படுவதற்கான காரணம்.
உணவில் AGE அளவுகளை குறைவாக வைப்பது எப்படி?
உணவுகளில் AGE அளவை குறைவாக வைப்பது மிகவும் எளிது. இதற்கு நீங்கள் எந்த ஒரு உணவையும் பொரிக்கவோ, வறுக்கவோ அல்லது கிரில் செய்யவோ கூடாது. வேகவைக்கப்பட்ட உணவை சாப்பிடுவதே சிறந்தது. அதிக அளவு எண்ணெய் அல்லது நெய் பயன்படுத்த வேண்டாம். அதிக அளவு பழங்கள், காய்கறிகள், கீரை வகைகள் மற்றும் முழு தானியங்களை சாப்பிடுங்கள். அதே நேரத்தில் டிரை ஃப்ரூட்ஸ், வறுத்த வால்நட், சூரியகாந்தி விதைகள், ஃப்ரைடு சிக்கன் போன்றவற்றை குறைவாக சாப்பிடுவது அவசியம்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.