குளிர்ந்த வானிலையில் மேக்கப் வழக்கத்தை சரியாக பராமரிப்பதற்கு பலர் தடுமாறலாம். ஏனெனில் குளிர்காலம் நம்முடைய சருமத்தில் வறட்சியை ஏற்படுத்தி அதனை பொலிவிழந்து காட்சியளிக்க செய்யும். ஆனால் சரியான முறையில் நீங்கள் சரும பராமரிப்பு வழக்கத்தை பின்பற்றினால் ஃபிரஷான, மென்மையான மற்றும் நீண்ட நேரம் நீடிக்க கூடிய மேக்கப்பை பெறலாம். அந்த வகையில் வின்டர் சீசனில் நீங்கள் பின்பற்ற வேண்டிய மேக்கப் டிப்ஸ் சிலவற்றை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ஈரப்பதம்
குளிர்ந்த காற்று நம்முடைய சருமத்தில் சற்று கடுமையாக செயல்படலாம். எனவே நல்ல ஹைட்ரேட்டிங் மாய்சரைசரை பயன்படுத்துவது அவசியம். இது உங்கள் சருமத்தில் உள்ள வறட்சியை போக்கி, அதில் வெள்ளை நிற திட்டுக்கள் ஏற்படுவதை தடுக்கும். உதாரணமாக ஹையாலுரோனிக் அமிலம் அல்லது செரமைடுகள் போன்ற மூலப் பொருட்கள் அடங்கிய மாய்சரைஸ்சர்களை பயன்படுத்துங்கள். மேக்கப் பயன்படுத்துவதற்கு முன்பு ஹைட்ரேடிங் அல்லது இலுமினேட்டிங் பிரைமர் பயன்படுத்துவது உங்களுக்கு ஸ்மூத்தான பேஸை வழங்கும்.
லைட் வெயிட் ஃபவுண்டேஷன்
வின்டர் சீசனில் எப்பொழுதுமே லைட் வெயிட் ஃபவுண்டேஷன் பயன்படுத்துவது அவசியம். லைட் வெயிட் பவுண்டேஷனுக்கு டின்டட் மாய்சரைசர் அல்லது BB கிரீம் பயன்படுத்துவது உங்களுடைய சரும தொனியை அழகாக எடுத்துக்காட்டும்.
கன்சீலர் பயன்படுத்துங்கள்
கன்சீலரை எங்கு தேவையோ அங்கு மட்டும் பயன்படுத்துங்கள். உதாரணமாக கண்களுக்கு கீழ் அல்லது சருமத்தில் ஏதேனும் சிவத்தல் இருந்தால் அந்த இடத்தில் பயன்படுத்துங்கள். கரைகள் அல்லது சிவப்பாக உள்ள பகுதிகளில் ஒரு லைட் லேயராக கன்சீலரை பயன்படுத்துங்கள்.
இதையும் படிக்கலாமே:
சிறிய அளவு பிளஷ்
அடுத்ததாக உங்களுடைய வின்டர் சீசன் மேக்கப்பை இன்னும் அழகாகுவதற்கு ஒரு இயற்கையான, சாஃப்ட் லுக் பிளஷ் சிறப்பாக செயல்படும். சாஃப்ட் பிங்க் அல்லது பீச் கிரீம் பிளஷை பயன்படுத்துங்கள்.
மஸ்காராவுடன் நியூட்ரல் ஐஷாடோ
உங்களுடைய மேக்கப் லுக்கை இயற்கையாக மாற்றுவதற்கு எப்பொழுதும் சாஃப்டான மற்றும் நியூட்ரலான ஷேடுகள் சிறப்பாக இருக்கும். லைட் பிரவுன் மற்றும் டான் போன்ற ஷேடுகளை பயன்படுத்துங்கள். கிரீம் அடிப்படையில் ஆன ஐஷாடோக்களை பயன்படுத்துங்கள். அதே நேரத்தில் சாஃப்டான ஷேடு கொண்ட மஸ்காராவை உபயோகிப்பது உங்களுக்கு சிறந்த இயற்கையான மேக்கப் லுக்கை வழங்கும்.
கிரீம் ஹைலைட்டர்
இப்பொழுது முகத்திற்கு ஒரு கிரீம் அல்லது லிக்விட் ஹைலைட்டரை தடவுங்கள். கேம்பயின் அல்லது சாஃப்ட் பீச் போன்ற டோன்கள் அருமையாக வேலை செய்யவும்.
லிப் கலர்
வின்டர் சீசனில் உங்களுடைய உதடுகள் மிக எளிதாக வறண்டு போய்விடும். எனவே உங்களுடைய உதடுகளுக்கு ஈரப்பதத்தை சேர்க்கும் ஹைட்ரேடிங் லிப் ப்ராடக்டுகளை பயன்படுத்துவது அவசியம். இது உங்கள் உதடுகளுக்கு தேவையான ஈரப்பதத்தை வழங்கும்.