பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் ஆங்காங்கே வளர்ந்திருக்கும் எருக்கஞ்செடி!!!

Author: Hemalatha Ramkumar
12 June 2023, 5:12 pm

பொதுவாக விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையாருக்கு எருக்கஞ்செடியிலிருந்து பெறப்படும் பூக்களால் செய்யப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டு வழிபாடு செய்வது வழக்கம். ஆனால் இந்த எருக்கஞ்செடியில் ஏராளமான மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளது. பலருக்கு இது தெரிவதில்லை. பல ஆண்டுகளாக எருக்கஞ்செடியின் விதைகள் ஆயுர்வேத சிகிச்சையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எருக்கஞ்செடி இலைகளில் காணப்படும் ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் அலர்ஜியை எதிர்த்து போராடும் பண்புகள் ஏராளமான நோய்களிலிருந்து நம்மை காக்கிறது. உதாரணமாக மலச்சிக்கல், பல் சார்ந்த பிரச்சனைகள், தசைப்பிடிப்பு, வயிற்றுப்போக்கு, மூட்டு வலி போன்ற பிரச்சனைகளுக்கு எருக்கஞ்செடியின் இலைகள் சிகிச்சை அளிக்க உதவுகிறது.

எருக்கஞ்செடி இலையுடன் சேர்த்து வெண்டைக்காய், இலவங்கப்பட்டை, சிவப்பு மிளகாய், டமால் பத்ரா, துளசி, ஷிலாஜித், நாவல் பழம் போன்றவற்றை சேர்த்துக் கொள்வது நீரிழிவு நோயாளிகளில் ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் என்று சொல்லப்படுகிறது.

வயிற்றுப்போக்கு, தொழுநோய், இருமல் போன்றவற்றை குணப்படுத்த எருக்கஞ்செடியின் வேர்கள் பயன்படுகின்றன. மேலும் எருக்கஞ்செடியின் இலையானது காயத்தை ஆற்றக்கூடிய பண்புகளை கொண்டுள்ளது.

எருக்கஞ்செடி இலையை கசக்கி அதிலிருந்து கிடைக்கும் சாற்றை உள்ளங்காலில் தடவிய பிறகு சாக்ஸ் அணிய வேண்டும். இதனை இரவு முழுவதும் அப்படியே வைத்திருந்து மறுநாள் காலை கால்களை கழுவிக் கொள்ளலாம். எருக்கஞ்செடியின் பலன்களைப் பெற இதனை தொடர்ந்து ஒரு வாரம் செய்து வர வேண்டும்.

எச்சரிக்கை: கர்ப்பிணி பெண்கள் ஒருபோதும் எருக்கஞ்செடியை எந்த வடிவிலும் பயன்படுத்தக் கூடாது. மேலும் எருக்கஞ்செடியிலிருந்து கிடைக்கக்கூடிய பால் விஷத்தன்மை கொண்டது. அதனை கண்களுக்கு அருகில் கொண்டு செல்வதை தவிர்க்கவும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Shruti spoke boldly after the leaked video அவர் சொன்னாரு நான் செய்தேன்.. லீக் வீடியோவுக்கு பிறகு போல்டாக பேசிய சிறகடிக்க ஆசை ஸ்ருதி!