கஷ்டப்படாம ஈசியா வெயிட் லாஸ் பண்ண தினமும் உலர் திராட்சை தண்ணீர் குடிங்க!!!

Author: Hemalatha Ramkumar
10 June 2023, 10:48 am

உலர்ந்த திராட்சையில் நமது செல்களை ப்ரீ ராடிக்கள்களிடமிருந்து பாதுகாக்க கூடிய ஆன்டி ஆக்சிடன்டுகள் அதிக அளவில் காணப்படுகிறது. மேலும் புற்றுநோய், வகை இரண்டு நீரழிவு நோய் மற்றும் அல்சைமர் நோய் போன்ற பல்வேறு விதமான நோய்களிலிருந்தும் ஆன்டிஆக்சைடுகள் நம்மை பாதுகாக்கின்றன.

உலர் திராட்சைகள் செல்களுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்கி, செல் உற்பத்திக்கு உதவி புரிகிறது. சோர்வு, மூச்சுத் திணறல், வெளிர்ந்த சருமம் போன்ற அறிகுறிகளை உண்டாக்கும் இரத்த சோகையில் இருந்து பாதுகாக்கக்கூடிய இரும்பு சத்து குறைபாட்டை உலர்ந்த திராட்சை போக்குகிறது.

இத்தனை நன்மைகள் அடங்கிய உலர்ந்த திராட்சையை தண்ணீரில் ஊற வைத்து அந்த நீரை பருகுவதால் அதன் நன்மைகள் பன்மடங்காக அதிகரிக்கின்றன. அது என்ன மாதிரியான நன்மைகள் என்று தெரிந்து கொள்வதற்கு முன்பாக இந்த நீரை எப்படி தயார் செய்வது என்பதை முதலில் பார்க்கலாம்.

ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும். இந்த சுடு நீரில்15 முதல் 30 உலர்ந்த திராட்சை சேர்த்து இரவு முழுவதும் அதனை ஊற விடவும். அந்த நீரை மட்டும் தனியாக வடிகட்டி காலையில் அதனை சூடாக்கவும். இதனை காலை வெறும் வயிற்றில் வெதுவெதுப்பாக பருகவும். சுவையை அதிகரிக்க எலுமிச்சை சாற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். இதனை குடித்த பிறகு அடுத்த 30 நிமிடங்களுக்கு வேறு எதையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இப்பொழுது இந்த உலர்ந்த திராட்சை தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

பொதுவாக நமது உடலில் மாசு, பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் மன அழுத்தம் காரணமாக நச்சுக்கள் தேங்கி இருக்கும். உலர்ந்த திராட்சை தண்ணீர் ஒரு இயற்கை நச்சு நீக்கும் பொருளாக செயல்பட்டு நமது உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை அகற்றி உடலை சுத்தம் செய்கிறது.

உடல் எடையை குறைக்க விரும்புவோர் உணவு கட்டுப்பாடு பின்பற்றுவது அவசியம். இது கலோரிகள் குறைப்பதன் மூலம் உடல் எடையை குறைக்க உதவுகிறது. உலர்ந்த திராட்சை தண்ணீர் குடிப்பது பசியை கட்டுப்படுத்த உதவுகிறது.

உலர் திராட்சையில் அதிக இரும்புச்சத்து உள்ளது. வழக்கமாக உலர் திராட்சை தண்ணீர் குடிப்பது இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் இரத்த சோகையை போக்க உதவுகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • good bad ugly movie special screening for ladies பெண்களுக்கு மட்டுமே திரையிடப்படும் குட் பேட் அக்லி திரைப்படம்! அதிரடி காட்டிய பிரபல திரையரங்கம்…