ஒரு பழங்கால மருந்து அல்லது நல்ல ஆரோக்கியத்திற்கான அமுதமாக திகழும் பார்லி ஒரு நம்பமுடியாத பானமாகும். பார்லியைக் கொண்டு செய்யப்படும் பார்லி நீர் ஒரு சிறந்த டையூரிடிக் ஆகும். இது சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளை (UTI) குணப்படுத்துகிறது மற்றும் கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
பார்லி நீர் ஆரோக்கியமான பானங்களின் பிரிவில் சிறந்த இடத்தை பிடித்துள்ளது. ஏனெனில் இது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தையும் கொண்டுள்ளது. பார்லி கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து, வைட்டமின்கள், அத்தியாவசிய தாதுக்கள் (கால்சியம், இரும்பு, மாங்கனீசு, மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் தாமிரம்), ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்களின் நல்ல ஆதாரமாக இருப்பதால், இதய நோய் மற்றும் நீரிழிவு அபாயத்தைக் குறைக்கும் என நம்பப்படுகிறது. இந்த பதிவில் பார்லி நீரின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
பார்லி நீரை தொடர்ந்து பயன்படுத்துவதால் உடல் மற்றும் குடலில் உள்ள நச்சுகள் சிறுநீர் பாதை வழியாக வெளியேற உதவுகிறது. இது உடலின் உள் அமைப்பை சுத்தப்படுத்த உதவுகிறது.
பார்லி நீர் ஒரு டையூரிடிக் ஆக செயல்படுவதால், இந்தியாவில் உள்ள பல வீடுகளில், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளுக்கு இது ஒரு இயற்கை தீர்வாக கருதப்படுகிறது. சிறுநீரக கற்கள் அல்லது நீர்க்கட்டிகளுக்கு இது ஒரு நல்ல தீர்வாகவும் கூறப்படுகிறது.
ஆயுர்வேதத்தில், பார்லி நீர் ஒரு செரிமான டானிக்காக கருதப்படுகிறது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது பெரும்பாலும் மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் இது தொற்றுநோய்களின் போது எலக்ட்ரோலைட் சமநிலையை மீட்டெடுக்க உதவுகிறது.
பார்லி நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரமாக இருப்பதால், இது உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த வழி. மேலும், இது செரிமானத்திற்கு நல்லது என்பதால், கொழுப்புகளின் வளர்சிதை மாற்றத்தையும் தூண்டுகிறது. ஆனால்
நார்ச்சத்து மற்றும் பீட்டா-குளுக்கன்களின் நல்ல ஆதாரமாக இருப்பதால், பார்லி நீர் இரத்தக் கொழுப்பு மற்றும் இரத்த சர்க்கரை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவும் செயல்படுகிறது. மேலும், இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது உடலை குளிர்விப்பதில் மட்டுமல்லாமல் இதயத்தையும் பாதுகாக்க உதவுகிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.