தனி சிறப்பு கொண்ட பாரம்பரிய காட்டுயானம் அரிசி!!!

Author: Hemalatha Ramkumar
6 June 2023, 7:41 pm

நம் அன்றாட உணவுகளில் முக்கியமானது அரிசியாகும். இவற்றில் பல வகையான பாரம்பரிய அரிசி வகைகள் உள்ளன. அவற்றில் இந்த காட்டுயானம் அரிசியும் ஒன்றாகும். இது பொதுவாக மற்ற அரிசிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டு காணப்படுகிறது.

அதாவது மற்ற அரிசி வகைகளை போன்று அனைத்து கடைகளிலும் கிடைப்பதில்லை. மேலும் மற்ற அரிசிகளைப் போல் வெண்மை நிறமாக இல்லாமல் லேசான பழுப்பு அல்லது சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. உயரத்துடன் ஒப்பிடும்போது பிற நெல் கதிர்களை போன்றல்லாமல் இது எட்டு அடி உயரம் வரை வளரக்கூடியது. பிற அரிசிகளை விட சற்று பெரியதாகவும் காணப்படுகிறது.
இதன் அறுவடை காலம் 7 முதல் 9 மாதங்கள் ஆகும்.

இந்த அரிசியில் நம் உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள், இரும்புச்சத்து, நார்ச்சத்து, மெக்னீசியம், சிங்க் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் போன்ற சத்துக்கள் அதிகமாக அடங்கியுள்ளது. மேலும் இவற்றில் சுக்கிரோஸின் அளவு மிகவும் குறைவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் தினமும் பயன்படுத்தலாம். இதனை உண்பதால் ரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவு உயர்வதில்லை.

காட்டுயானம் அரிசியை தினமும் உண்பதால் இவற்றில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நமது உடலில் உள்ள புற்றுநோய் செல்களை அழித்து புற்றுநோய் வராமல் நம்மை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் புற்றுநோயைக் குணப்படுத்தும் தன்மையைக் கொண்டது.

இவற்றில் இருக்கக்கூடிய நார்ச்சத்துக்கள் வயிற்றின் செரிமான பிரச்சனையை எளிதில் போக்குகிறது. இதனால் மலச்சிக்கல் எளிதில் தீர்க்கப்படுகிறது. மேலும் கெட்ட எல்டிஎல் கொழுப்பின் காரணமாக ஏற்படும் அதிகப்படியான உடல் எடையை குறைக்கிறது. மலச்சிக்கல் மற்றும் அதிகப்படியான உடல் பருமன் பிரச்சனை உள்ளவர்கள் தொடர்ந்து காட்டுயானம் அரிசியைச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் உண்டாகும்.

ஆண்டி ஆக்சிடன்ட் இந்த அரிசியில் அதிகளவு இருப்பதால், இதய நோய் உள்ளவர்களுக்கு நல்ல மருந்தாகும். இதய சம்மந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் இந்த காட்டுயானம் அரிசியை தங்களது உணவில் தினமும் சேர்த்துக் கொள்வது நல்லது.

காட்டுயானம் அரிசியை சாதம் மட்டுமின்றி இட்லி, தோசை, இடியாப்பம், புட்டு, அடை, பொங்கல், கஞ்சி, பாயசம், பணியாரம் மற்றும் பலகாரம் போன்ற அரிசிகள் கலந்து தயாரிக்க கூடிய அனைத்து வகை உணவுகளாகவும் தயார் செய்து உண்ணலாம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!