மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் கொத்தவரங்காயின் மருத்துவ பயன்கள்!!!

Author: Hemalatha Ramkumar
7 June 2023, 7:13 pm

மக்களால் அதிகம் உண்ணப்படாத ஒரு சில காய்கறி வகைகளில் ஒன்று கொத்தவரங்காய் ஆகும். ஆனால் இதில் பலவிதமான வைட்டமின் சத்துக்கள், நார் சத்துக்கள், கால்சியம் போன்ற தாதுச்சத்துக்கள் அடங்கியுள்ளன. இந்த கொத்தவரங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

கொத்தவரங்காய் பைட்டோ நியூட்ரியன்கள் மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. எனவே இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. எனவே, நீரிழிவு நோயாளிகள் உண்ணக்கூடிய சிறந்த காய்கறியாகும்.

கொத்தவரங்காயில் புரதம், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளது. மேலும் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் கலோரிகளைக் கொண்டுள்ளது. எனவே இந்த நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் ஆகியவை ரத்த நாளங்களில் கொழுப்புகளால் உருவாகும் சிறு சிறு அடைப்புகளை நீக்கி சீரான ரத்த ஓட்டத்திற்கு வழி செய்கிறது. இதனால் ரத்த அழுத்தம் சீராக்கப்பட்டு மாரடைப்பு போன்ற இதய நோய்கள் தடுக்கப்படுகிறது.

கொத்தவரங்காயில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாழ்ச்சத்துக்கள் எலும்புகளின் அடர்த்தியை அதிகரித்து வலுப்பெறச் செய்து எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இது மிக குறைந்த அளவு கலோரி கொண்டிருப்பதாலும் அதிக அளவு வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்களை கொண்டிருப்பதாலும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கொத்தவரங்காயை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கிறது.

கொத்தவரங்காய் உண்பதால் நமது உடலில் உள்ள ரத்தத்தில் தேங்கி இருக்கும் நச்சுக்கழிவுகள் நீக்கப்படுகிறது. மேலும் ரத்த உற்பத்தியை அதிகரித்து ரத்த சோகை போன்ற நோயை எளிதில் போக்குகிறது. எனவே ரத்தசோகை உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள் போன்றவர்கள் கொத்தவரங்காயை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

கொத்தவரங்காய் சற்று கசப்பான சுவை உடையதாகும். எனவே குழம்பு அல்லது பொரியல் செய்யும்போது, அதன் கசப்பைக் குறைக்க, சிறிதளவு தக்காளி அல்லது தேங்காய் துருவல் சேர்த்துக் கொள்ளலாம்.

மேலும் கொத்தவரங்காயை நன்றாக காய வைத்து அதன் விதைகளை பொடியாக அரைத்து அதனை நாம் செய்யக்கூடிய வேறு சில உணவுப் பொருட்களிலும் சேர்த்துக் கொள்ளலாம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 502

    0

    0