முளைக் கட்டிய பயிர்களால் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?

Author: Hemalatha Ramkumar
6 March 2023, 1:42 pm

பொதுவாக நாம் முளைக் கட்டிய பச்சைப் பயிறு சாப்பிடுவது வழக்கம். அதில் புரதச் சத்து மிகுதியாக உள்ளதால் அது நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி நம் சருமத்தையும் பளபளப்பாக இருக்க உதவும். முளைக் கட்டிய பயிரை அப்படியே சாப்பிடலாம் அல்லது சேலட் போன்று லேசாக எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு சாப்பிடலாம். நம் ஆரோக்கியத்தை பேணி பாதுக்காக்க பச்சைப் பயிறு தவிர்த்து வேறு சில தானியங்களை நாம் முளைக் கட்டி சாப்பிடலாம். அவை பின்வருமாறு:

  • கடின உழைப்பு செய்பவர்கள் கொண்டைக் கடலையை முளைக் கட்டி சாப்பிடலாம். அது விளையாட்டு வீரர்களுக்கும் உகந்தது ஆகும்.
  • சர்க்கரை நோயாளிகள் வெந்தயத்தை முளைக் கட்டி சாப்பிடலாம். அது சர்க்கரையின் அளவை கட்டுக்குள் கொண்டு வரும். அது மட்டும் அல்ல வயிற்றுப் புண், வெள்ளைப்படுதல் மற்றும் அல்சரை போன்ற நோய்களுக்கு இது சிறந்த தீர்வாக அமைகிறது.
  • கோதுமையை முளைக் கட்டி சாப்பிட்டால், அது புற்றுநோயின் தாக்கத்தைக் குறைக்கும்.
  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!