காச நோயைக் கூட போகிற போக்கில் குணப்படுத்தும் அதிசய மூலிகை!!!

Author: Hemalatha Ramkumar
23 May 2023, 3:20 pm

யானை நெருஞ்சி செடியில் அதிகப்படியான மருத்துவ குணங்களும், பயன்களும் அடங்கியுள்ளன. இவற்றை எளிமையாக வீட்டிலேயே பயன்படுத்தி நோய்களை தீர்க்கும் முறைகளில் ஒரு சிலவற்றை இங்கே பார்ப்போம்.

பலருக்கு சிறுநீரக கல் பிரச்சனை என்பது அதிகமாக காணப்படுகிறது. சிறுநீரக கல் பிரச்சனையால் அவதிப்படுவோருக்கு இந்த மூலிகை மிகச்சிறந்த வரப்பிரசாதம் ஆகும். ஆனை நெருஞ்சி மூலிகை சிறுநீரக கல்லை மிக எளிதாக கரைக்கக் கூடிய ஆற்றல் கொண்டது. இந்த செடியை கொண்டு எவ்வாறு சிறுநீரக கல் பிரச்சினையை தீர்க்கலாம் என்று இங்கே பார்ப்போம். சிறிதளவு யானை நெருஞ்சி செடியை எடுத்து நன்றாக நீரில் சுத்தம் செய்ய வேண்டும். இதை 200 மில்லி அளவிற்கு சாதம் வடித்த நீரில் (கஞ்சி தண்ணி) சுமார் 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இந்த நீரை வெறும் வயிற்றில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு குடித்து வந்தால் சிறுநீரக கல்லானது சிறுநீர் வழியாகவே சிறிது சிறிதாக வெளியேற்றப்படுகிறது.

காசநோய் என்று அழைக்கப்படக்கூடிய எலும்புருக்கி நோய் உள்ளவர்கள் இந்த மூலிகையை பயன்படுத்தி எளிதில் குணமடையலாம். இந்த செடியில் முட்களை கொண்ட காய்கள் இருக்கும். இந்த காய்களை சேகரித்து நன்கு உலர்த்தி பொடியாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியை ஒரு ஸ்பூன் அளவிற்கு ஒரு கிளாஸ் பாலில் கலந்து காலை மற்றும் மாலை இரண்டு வேலையும் தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது எலும்புருக்கி நோயானது குணமடைந்து விடும்.

நமது உடலில் நோய்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் அதிகப்படியான உடல் சூடு ஆகும். யானை நெருஞ்சி செடி இதை கொண்டு உடல் சூட்டை எளிதில் போக்கலாம். இந்த செடியை சிறிதளவு எடுத்து கொண்டு அரை லிட்டர் அளவு நீரில் இந்த செடியை முக்கி முக்கி எடுக்க வேண்டும். இதனால் நீரானது எண்ணெய் போன்ற வழவழப்பான தன்மை உடையதாக மாறுகிறது. இந்த நீரை வடிகட்டி இதனுடன் நாட்டுச் சர்க்கரை அல்லது கற்கண்டு சேர்த்து காலையில் மட்டும் தொடர்ந்து குடித்து வரும்போது உடல் சூடு, நீர் கடுப்பு போன்றவை தணிக்கப்படுகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 502

    0

    0