பாலா . . கேழ்வரகா… கால்சியம் எதுல அதிகமா இருக்குன்னு பார்த்திடுவோமா…???

Author: Hemalatha Ramkumar
20 December 2024, 10:46 am

கால்சியம் என்பது வலுவான எலும்புகள் மற்றும் ஆரோக்கியமான பற்களை பராமரிப்பதற்கு மிகவும் அவசியமான ஒரு ஊட்டச்சத்து. பொதுவாக கால்சியம் என்று சொல்லும் பொழுதே நம்முடைய ஞாபகம் பாலாக தான் இருக்கும். ஆனால் இன்றைய நாட்களில் கேழ்வரகு போன்ற பாரம்பரிய தானியங்கள் அதிக கால்சியம் அளவுக்காக கவனம் பெற்று வருகிறது. எனவே இந்த இரண்டில் உள்ள ஊட்டச்சத்துகளை ஒப்பிட்டு பார்த்து இரண்டில் எது சிறந்தது என்பதை பார்க்கலாம்.

பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் 

ஒரு கிளாஸ் பசும்பாலில் தோராயமாக 300 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. தினசரி கால்சியம் தேவையை பூர்த்தி செய்வதற்கு இது ஒரு நல்ல மூலமாக கருதப்படுகிறது. பாலில் உள்ள கால்சியத்தை உடனடியாக நம்முடைய உடலால் உறிஞ்சி, பயன்படுத்த முடியும். கால்சித்தை தவிர பாலில் புரோட்டீன், வைட்டமின் D, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற எலும்பு ஆரோக்கியத்திற்கு அவசியமான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது.

கேழ்வரகில் உள்ள ஊட்டச்சத்துக்கள் 

100 கிராம் கேழ்வரகில் 344 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. இது பாலை விட அதிகம். ஆனால் கேழ்வரகில் பைட்டேட்ஸ் போன்ற எதிர் ஊட்டச்சத்துக்கள் இருப்பதன் காரணமாக கால்சியம் உறிஞ்சப்படுவது பாலை காட்டிலும் சற்று குறைவாக இருக்கும். கேழ்வரகில் இரும்பு சத்து, அமினோ அமிலங்கள் மற்றும் உணவு நார்ச்சத்து போன்ற பிற ஊட்டச்சத்துக்கள் காணப்படுவதால் சரிவிகித உணவுக்கு ஏற்ற ஒரு உணவுப் பொருளாக இது அமைகிறது.

பால் மற்றும் கேழ்வரகு ஒப்பிட்டு பார்த்தல் 

100 கிராம் பாலில் 125 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. அதே நேரத்தில் 100 கிராம் கேழ்வரகில் 344 மில்லி கிராம் கால்சியம் காணப்படுகிறது. பாலில் லாக்டோஸ் இருப்பதால் இதில் உள்ள கால்சியத்தை உடனடியாக நம்முடைய உடலால் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் கேழ்வரகில் கால்சியம் உறிஞ்சுதலை தடுக்கக்கூடிய பைட்டேட்ஸ் போன்ற எதிர் ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. ஆனால் இந்த பிரச்சனையை தவிர்ப்பதற்கு கேழ்வரகை ஊற வைத்தோ, முளைக்கட்டியோ அல்லது புளிக்க வைத்தோ சாப்பிடலாம்.

இதையும் படிச்சு பாருங்க:  கிரிஸ்பி டேஸ்டி மைசூர் மசால் தோசை ரெசிபி!!!

பால் மற்றும் கேழ்வரகின் நன்மைகள்

*பால் மற்றும் கேழ்வரகில் உள்ள கால்சியம் நம்முடைய எலும்புகள் மற்றும் பற்களை வலிமையாக்கும். 

*பாலில் உள்ள தண்ணீர், ஊட்டச்சத்துக்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்கும். 

*கேழ்வரகு குறைவான கிளைசெமிக் எண் மற்றும் நார்ச்சத்து கொண்ட காரணத்தால் ரத்த சர்க்கரை அளவை சீராக்கி, டயாபடீஸ் பிரச்சனையை கட்டுப்படுத்துவதற்கு உதவுகிறது. 

பால் மற்றும் கேழ்வரகு இடையே ஒன்றை தேர்வு செய்வது என்பது தனிநபரின் உணவு சார்ந்த விருப்பங்கள், ஊட்டச்சத்து தேவைகள் ஆகியவற்றை பொருத்து அமையும். பாலை பருக முடியாத நபர்களுக்கு கேழ்வரகு என்பது அற்புதமான ஒரு மாற்றீடாக அமைகிறது. எனினும் பாலில் உள்ள கால்சியத்தை நம்முடைய உடலால் மிக எளிமையாக உறிஞ்சி, பயன்படுத்த முடியும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி